தனி மாநிலமாக உள்ளது கரூர்; தனி அரசாங்கம் நடத்துகிறார்கள் - மாஜி அமைச்சர்கள் ஆவேசம்

 
k

கரூர் தனி மாநிலமாக இருக்கிறது.  அங்கே தனி அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் செந்தில் பாலாஜியின் ஆட்கள்.  முதலமைச்சருக்கு கூட தகவல் சொல்ல மாட்டார்கள் என்று ஆவேசப்பட்டுள்ளார்கள் முன்னாள் அதிமுக அமைச்சர்கள். 

kp

 திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கரூரில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.  இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே. பி. முனுசாமி,  நத்தம் விஸ்வநாதன்,  எம். ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினார்கள் .

முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசிய போது,   கரூர் தனி மாநிலமாக இருக்கிறது. இங்குள்ள அதிகாரிகள் தனி அரசாங்கமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உளவுத்துறை செந்தில் பாலாஜியின் ஆட்கள் முதலமைச்சருக்கு கூட தகவல் சொல்ல மாட்டார்கள்.    ஸ்டாலின் குடும்பமே செந்தில் பாலாஜியை நம்பிக் கொண்டிருக்கிறது.  தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு  எச்சரிக்கை ஒன்று விடுக்கிறேன்.  செந்தில் பாலாஜிக்கு அடுத்த இலக்கு முதல்வர் பதவி தான் என்றார்.

 அவர் மேலும்,   செந்தில் பாலாஜி அடுத்ததாக இணையப் போகும் கட்சி பாஜக என்றார்.

k

 முன்னாள் அமைச்சர் கே. பி. முனுசாமி பேசிய போது,   சீனியர் அமைச்சர்களுக்கு முக்கியத்துறை கொடுக்கல முதல்வர் ஸ்டாலின்.   அப்படி கொடுத்தால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது.  அவர்களும்  சரியாக கப்பம் கட்ட மாட்டார்கள் என்று தெரிந்துதான் ஜூனியர்களுக்கு முக்கியத்துறைகளை ஒதுக்கி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

 செந்தில் பாலாஜிக்கு அப்படித்தான் கொடுத்திருக்கிறார் . அவர்தான் சரியாக கப்பம் கட்டுவார் . அரசு அதிகாரிகள் அதிகார வரம்பை நேர்மையாக பயன்படுத்துங்கள். இல்லை என்றால் அரசியல்வாதிகளை தாண்டி அதிகாரிகள் நோக்கி எங்கள் போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்தார்.