இதெல்லாம் ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு தெரிந்துதான் நடந்ததா? - பாஜக மாநில துணைத்தலைவர்

 
ep ep

அதிமுக முன்னாள்  அமைச்சர் பொன்னையன் பா.ஜ.க விமர்சனம் செய்தது மாபெரும் தவறு, அவர் ஈபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோரிடம் சொல்லிட்டு சென்னாரா என விளக்கவேண்டும் என பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார். 

அதிமுக வெற்றிபெறுவதை நாங்கள் வரவேற்கிறோம்!'' - சொல்கிறார் கரு.நாகராஜன் |  bjp karu nagarajan shares his views on current political happenings

சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் செய்தியளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக முன்னாள்  அமைச்சர் பொன்னையன் பா.ஜ.க வளர்வது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல என விமர்சனம் செய்தது  மாபெரும் தவறு. அவர் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரிடம் சொல்லிட்டு சென்னாரா என விளக்கவேண்டும்,  பல்வேறு தமிழக பிரச்சினைகளில் பாஜக முன்னெடுற்று பணி செய்துவருகிறது. அவர் பேப்பர் படிக்க மாட்டாரா? டிவி பார்க்க மாட்டாரா? 

தேசிய அளவில் போட்டி தேர்வுகளில் ஆர்வமாக கலந்துகொள்பவர்களுக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது, தபால் துறை, ரயில்வே போன்ற பணிகளில் தமிழக இளைஞர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. அதுபோல்  தேசிய அளவில் நடைபெறும் போட்டி தேர்வுகளில் பங்கேற்பதுல்லை, இதனால்  ஒருவரும் பணியில் இல்லை என கூறினாலும் ஆச்சர்ய படுவதுவதில் ஒன்றுமில்லை. கலந்துகொண்டால் தானே வாய்ப்பு  கிடைக்கும். அந்த வாய்ப்பை  வடமாநிலத்தவர்கள் பயன்படுத்திக்கொண்டு மத்திய அரசு பணிகளில் சேருகின்றனர்” எனக் கூறினார்.