எனக்கு இளையராஜா மீது மரியாதை உண்டு.. அம்பேத்கருடன் மோடியை ஒப்பிடுவது முற்றிலும் பொருத்தமற்றது.. கார்த்தி சிதம்பரம்

 
மோடி, அம்பேத்கர்

எனக்கு இளையராஜா மீது மரியாதை உண்டு ஆனால் அவர் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிடுவது முற்றிலும் பொருத்தமற்றது என இளையராஜாவின் கருத்துக்கு கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்தார். 

அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்துக்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.  அந்த முன்னுரையில் அம்பேத்கரும் மோடியும் ஏழ்மையில் ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள்.   அதை ஒழிக்க பாடுபட்ட இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவு கண்டவர்கள்.  செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்.   இன்றைக்கு மோடியின் செயல்பாடுகளைப் பார்த்து அம்பேத்கர் பெருமைப்படுவார் என குறிப்பிட்டு இருந்தார். ஆனால், மோடியைப் பார்த்து அம்பேத்கர் பெருமைப்படுவார் என்று எப்படி சொல்லலாம் என்று சிலர் இளையராஜாவுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இளையராஜா

தற்போது ப.சிதம்ரபத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரமும், அம்பேத்கரையும், மோடியையும் இளையராஜா ஒப்பிட்டு பேசியது பொருத்தமற்றது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் டிவிட்டரில், இசைஞானி இளையராஜா மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. அவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிடுவது முற்றிலும் பொருத்தமற்றது. 

கார்த்தி சிதம்பரம்

ஏனெனில் அவர் (இளையராஜா) அனைத்து அரசியலமைப்பு நெறிமுறைகளையும் தகுதியையும் தூக்கி எறிந்த ஒரு நபரை (மோடி) நமது அரசியலமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த அறிஞருடன் (அம்பேத்கர்) ஒப்பிடுகிறார். அம்பேத்கர் முன்வைத்த சமூக சீர்திருத்தங்கள், சமூகத்தில் மோடி செலுத்திய நச்சு விஷத்திற்கு முற்றிலும் மாறானவை என பதிவு செய்துள்ளார்.