இந்த விஷயத்தில் நானே நேரடியாக களம் இறங்க போகிறேன் - அதிரடி காட்டும் சு.சாமி

 
க

இந்த விஷயத்தில் நானே நேரடியாக களம் இறங்க போகிறேன் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் சுப்பிரமணியன் சாமி.

 பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார் .  34 லட்சம் ரூபாய் அவர் மோசடி செய்ததால் அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.  இதற்காகத்தான் சுப்பிரமணியன்சாமி இவ்வாறு குரல் கொடுத்திருக்கிறார்.

 பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் உள்ளது.  இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது.  இக்கோவில் சிலைகளை கடந்த ஆண்டு மர்ம நபர்கள் உடைத்ததாக சர்ச்சை வெடித்தது.   மாற்று மதத்தினர் தான் இந்த கோவில் சிலைகளை இடித்து விட்டதாக இந்த அமைப்பினர் புகார் தெரிவித்து வந்தனர்.

சு

பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் இணையதளம் மூலமாக சிறுவாச்சூர் கோவிலை சரி செய்யப் போகிறேன் என்று அறிவித்தார் .  இதற்கு பலரும் நிதி உதவி செய்து வந்தனர்.  இந்த நிதி உதவி மொத்தமாக 34 லட்சம் ரூபாய் வசூல் ஆகி இருக்கிறது.   இந்த தொகையை அவர் மோசடி செய்து விட்டதாக புகார் கூறப்பட்டிருக்கிறது.  

 கார்த்தி கோபிநாத் வசித்து வரும் சென்னை ஆவடி பகுதியில் இந்த புகார் அளிக்கப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.   தங்களுக்கு எதிரான குரல்களை ஒடுக்க திமுக அரசு முயற்சிக்கிறது .கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக நிற்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

 அதேபோல் பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா,  கார்த்திக் கோபிநாத் கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது . இந்துக்களோ இந்து கோவில்களோ பாதிக்கப்பட்டால் அதற்கு உதவிட யாரும் முன்வரக்கூடாது என்று பயமுறுத்தும் இந்து விரோத அரசின் வன்மத்தின் வெளிப்பாடு இது என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

க்ஹ்

 பாஜக நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்,  பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி , இந்த விவகாரத்தில் தானே நேரடியாக களமிறங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.   அவர் ,  ‘’இளைய பாரதம் என்கிற youtube சேனல் நடத்தும் கார்த்திக் கோபிநாத் ஆன்மீக சிந்தனை உள்ள இளைஞர். அவர் பெரம்பலூர் அருகில் இருக்கும் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் அருகில் இருக்கும் பெரிய சாமி கோவில் சிலைகளை இந்து விரோத அயோக்கியர்கள் உடைத்திருக்கிறார்கள் . அதை புணரமைக்க வேண்டும் என்பதற்காக ஆன்மீக பக்தர்கள் எடுக்கும் முயற்சிக்கு உதவ கார்த்திக் கோபிநாத் முன் வந்திருக்கிறார்.

க்க்

 மிலாத் என்கிற செயலி வழியாக கோவில்களை புனரமைக்க பணம் வசூல் செய்திருக்கிறார். அந்த பணம் அவரிடம் பத்திரமாக இருக்கிறது.  இந்த நிலையில் பெரியசாமி கோவிலுக்கு சொந்தமான மாடப்புறம் கிராமத்து மக்கள் கோவில் திருப்பணிகளை செய்யும்படி கார்த்திக் கோபிநாத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். அதற்கான வேலைகளிலும் அவர் இறங்கி இருக்கிறார்.  ஆனால் பணம் வசூலித்து அவர் ஏமாற்றி விட்டதாக சேலத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை ஆவடிக்கு வந்து அப்பகுதியில் வசிக்கும் கார்த்திக் கோபிநாத் மீது புகார் கொடுத்து இருக்கிறார் . ஏற்கனவே பாஜக மீது கோபத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் உடனே நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.  தமிழக போலீஸ் நடவடிக்கைகள் தவறான பாதையில் செல்வதால் நானே இந்த விஷயத்தில் நேரடியாக களமிறங்க போகிறேன் என்று அவர் அறிவித்திருக்கிறார்.