காய் நகர்த்தும் கார்த்தி சிதம்பரம்! காங்., மேலிடம் ஆலோசனை

 
க்

 அடுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் யார் என்பது குறித்து சலசலப்பு இப்போது கட்சிக்குள் அதிகம் எழுந்திருக்கிறது.  கார்த்தி சிதம்பரம் எம்பி,  ஜோதிமணி எம்பி , விஜயதாரணி எம்.எல்.ஏ. ஆகியோர் இந்த பதவிக்கு காய் நகர்த்தி வருகின்றார்கள். 

 ராகுல் காந்தி நடை பயணத்தில் கூடவே பயணித்து வருகிறார் ஜோதிமணி.  இதனால் ராகுல் காந்தியின் மூலமாக அவர் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பெற்றுவிட காய் நகர்த்தி வருகிறார் என்று தகவல் வரவுகிறது.  விஜயதாரணியம்  தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பிடித்து விட தீவிரம் காட்டி வருகிறார்.  ஆனால் கார்த்தி சிதம்பரம்  டெல்லிக்கே போய் முகாமிட்டு காய் நகர்த்தி வருகிறார் என்கிறது கட்சி வட்டாரம்.

க்

 புத்தாண்டு முன்னிட்டு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக நேரில் சந்தித்து இது தொடர்பாக பேச முயன்றிருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.  அது முடியாமல் போயிருக்கிறது.  ஆனாலும் இருவரிடமும் தொலைபேசியில் பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  ராகுல் காந்தி இடம் 17 நிமிடங்களும்  பிரியங்கா அவரிடம் 20 நிமிடங்களும் தொலைபேசியில் பேசி இருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.

 தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து அவர் பேசியதாக சொல்கிறது கட்சி வட்டாரம் .   மாநில பதவி தந்தால் தன் சொந்த பணத்தை கட்சிக்கு செலவு செய்வதாகவும்,  இழந்த தமிழக காங்கிரஸின் செல்வாக்கை மீட்டு தருவதாகவும் கார்த்தி சிதம்பரம் ராகுல்,  பிரியங்காவிடம் உறுதி கூறி இருக்கிறாராம் .

டில்லியில் கையோடு கைகோருங்கள் நிகழ்ச்சி குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியும் பங்கேற்றிருக்கிறார்.  நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் கட்சியினரிடம் பேசிய போது,  தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை மாற்றினால்  ஏற்றுக்கொள்வோம் என்றும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் பிப்ரவரி மாதம் நடக்கும் காங்கிரஸ் மாநாடு குறித்து ஆலோசனை செய்வதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே,  கேசி வேணுகோபால் ஆகியோர் இன்று டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள் . இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவராக அடுத்து யாரை நியமிக்கலாம் என்பது குறித்தும்  விவாதிக்கப்பட இருக்கிறது என்கிறது கட்சி வட்டாரம்.