காங்கிரஸ் எப்போதும் முஸ்லிம் வாக்குகளில் கவனம் செலுத்த விரும்புகிறார்கள்... கர்நாடக பா.ஜ.க. அமைச்சர்

 
காங்கிரஸ்

காங்கிரஸ் எப்போதும் முஸ்லிம் வாக்குகளில் கவனம் செலுத்த விரும்புகிறார்கள் என கர்நாடக பா.ஜ.க. அமைச்சர் குற்றம் சாட்டினார்.

கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, ஆர்.எஸ்.எஸ். ஒரு மதம் சார்ந்த அமைப்பு என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். ஒரு தலித், ஓ.பி.சி. அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் எப்போதாவது ஆர்.எஸ்.எஸ். தலைவராகி உள்ளாரா? என கேள்வி எழுப்பினார். இந்நிலையில், காங்கிரஸ் எப்போதும் முஸ்லிம் வாக்குகளில் கவனம் செலுத்த விரும்புகிறார்கள்  என கர்நாடக கல்வி துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் குற்றம் சாட்டினார்.

சித்தராமையா

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடக கல்வி துறை அமைச்சருமான  பி.சி. நாகேஷ் கூறியதாவது: அவர்கள் (காங்கிரஸ்) எப்போதும் முஸ்லிம் வாக்குகளில் கவனம் செலுத்த விரும்புகிறார்கள். 2022 சட்டப்பேரவை தேர்தல்களில் தோல்வியடைந்ததால் மக்களை முக்கிய பிரச்சினையிலிருந்து திசைதிருப்ப நினைக்கிறார்கள். அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

பி.சி.நாகேஷ்

(பாடப்புத்தகம் விவகாரம் தொடர்பான கேள்விக்கு) அவர்களின் நோக்கம் பாடப்புத்தகம் அல்ல, ஆனால் தேர்தலுக்காக பிரச்சினையை அரசியலாக்குவது. கடந்த 65 ஆண்டுகளாக மாணவர்களுக்கு பொய்யான விஷயங்களை கற்பித்து வந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.