கர்நாடகாவில் சிறந்த ஆட்சியின் அடிப்டையில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்... முதல்வர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை
கர்நாடகாவில் தனது சிறந்த ஆட்சியின் அடிப்படையில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
கர்நாடகாவில் முதலவ்ர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏகாசியை முன்னிட்டு நேற்று முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருக்கு அருகில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோயிலில் தரிசனம் செய்த பிறகு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் கூறியதாவது: வைகுண்ட இன்று இந்து மதத்தில் மிகவும் புனிதமான நாள், இந்த நாளில் வெங்கடேசப் பெருமானை தரிசனம் செய்வது வழக்கம்.
திருப்பதி செல்ல முடியாததால் , திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வயாலிகாவல் வெங்கடேஸ்வரா கோயிலுக்கு வந்து, மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்தேன். நடப்பாண்டு வெங்கடேசப் பெருமானின் அருள் கிடைக்கும். வெங்கடேஸ்வரா என்றால் வளர்ச்சி மற்றும் செழிப்பு என்று பொருள். புத்தாண்டில் கர்நாடகா மாநிலம் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை காணும். சித்தேஸ்வரா துறவி என்னை அடையாளம் கண்டு கொண்டார் ஆனால் அவரால் பேச முடியவில்லை.
இது தவிர அவரது உடல் அளவுருக்கள் அனைத்தும் சாதாரணமாக இயங்கின. அவரது உடல் நிலை குறித்து விசாரித்த பிரதமர் மோடியின் குரலை அவர் அடையாளம் கண்டு கொண்டார். நான் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன் மற்றும் அவரது உடல் நலம் குறித்த தகவல்களை தொடர்ந்து பெறுகிறேன். பீதி அடையத் தேவையில்லை. துறவிக்கு ஒரு சிறப்பு உள்ளார்ந்த சக்தி உள்ளது. அவர் உடல்நலக்குறைவை வெல்வார். நீண்ட காலம் நம்முடன் இருப்பார். பா.ஜ.க. தனது சிறந்த ஆட்சியின் அடிப்படையில் மீண்டும் ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.