மோடி பெயரை மட்டும் வைத்துகொண்டு தேர்தலில் வெற்றிப்பெற முடியாது- பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு

 
modi modi

மோடி பெயரை மட்டும் வைத்துக்கொண்டு கர்நாடக மாநில தேர்தலில் வெற்றி பெற முடியாது என பாஜக கட்சி கூட்டத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சங்கன்னா கரடி தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Karadi Sanganna Amarappa | PRSIndia

கர்நாடக மாநிலம் கொப்பல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் சங்கன்னா கரடி. இவர் தனது நாடாளுமன்ற தொகுதியில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசும் போது பிரதமர் மோடி பெயரை மட்டும் கொண்டு கர்நாடக மாநில தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார். எங்கு சென்றாலும் பேனர்களில் மோடியின் புகைப்படம் மட்டுமே வைக்கப்படுகிறது, இந்த நிலை மாற வேண்டும் என்று சங்கன்னா கரடி கூறியுள்ளார். மாநில மற்றும் உள்ளூர் தலைவர்களின் நிலையையும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைமை புரிந்துகொள்ள வேண்டும் என்றார். 

சங்கன்னா கரடி பிரதமர் மோடியை கொச்சையாக பேசியுள்ளதாக கொப்பல் மாவட்ட பாஜக தலைவர் பள்ளியகவுடா பாட்டீல் தெரிவித்துள்ளார்.