இந்திய தேசிய காங்கிரஸின் சகாப்தம் முடிந்து விட்டது, தற்போதைய கட்சி இத்தாலி காங்கிரஸ்... பா.ஜ.க. எம்.எல்.ஏ.

 
காங்கிரஸ்

இந்திய தேசிய காங்கிரஸின் சகாப்தம் முடிந்து விட்டது. தற்போதைய கட்சி இத்தாலி காங்கிரஸ் என்று கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. சி.டி. ரவி தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வாரில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசுகையில், எங்கள் கட்சி (காங்கிரஸ்) தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் உயிரை  கொடுத்தார்கள். நீங்கள் (பா.ஜ.க.) என்ன செய்தீர்கள்?. உங்கள் நாய்கள் எதுவும் நாட்டுக்காக இறந்ததா? குடும்ப உறுப்பினர்கள் யாராவது தியாகம் செய்திருக்கிறார்களா? இல்லை என்று பேசியிருந்தார். 

மல்லிகார்ஜூன் கார்கே

கார்கேவின் கருத்துக்கு கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. சி.டி. ரவி பதிலடி கொடுத்துள்ளார். சி.டி. ரவி கூறியதாவது: நான் கார்கேவிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நாட்டின் சுதந்திரத்திற்கு காங்கிரஸ் பங்களித்துள்ளது என்பதை ஒப்புக்கொள்வோம், ஆனால் சுதந்திர இந்தியாவை கொள்ளையடிப்பதற்காக இந்த பங்களிப்பு செய்யப்பட்டதா? உங்கள் குடும்பத்தின் அடுத்த ஐந்து தலைமுறைகளை நடத்துவதற்கு பணம் மற்றும் சொத்துக்களை அள்ளுவதற்கான பங்களிப்பு போதுமானதா?. 

சி.டி.ரவி

பா.ஜ.க.வில் இருந்து ஒரு நாய் கூட சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று நீங்கள் கூறும்போது, காங்கிரஸை சேர்ந்த நாய்கள் எல்லாம் கொள்ளையடித்த பணத்தில் ஐந்து நட்சத்திர சிகிச்சை பெறுவதற்காக சுதந்திரத்திற்காக போராடினார்கள் என்று சொல்கிறீர்களா?. சுதந்திரத்திற்காக போராடிய காங்கிரஸூம் இன்றைய காங்கிரஸூம் வேறு. இந்திய தேசிய காங்கிரஸின் சகாப்தம் முடிந்து விட்டது. தற்போதைய கட்சி இத்தாலி காங்கிரஸ். இவ்வாறு அவர் தெரிவித்தார்.