பாவம் பெருகும் போது அழிவு உண்டு.. சிவ சேனாவை தாக்கிய பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்

 
‘பெண்களிடம் தகாத முறையில் பேசுகிறார்’: கரண் ஜோகர் குறித்து கங்கனா

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்ததை குறிப்பிட்டு, பாவம் பெருகும் போது அழிவு உண்டு என சிவ சேனாவை நடிகை கங்கனா ரனாவத் கிண்டல் செய்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அதிரடியான கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர். மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக பேசி விடுவார். சிவ சேனாவுக்கும், கங்கனா ரனாவத்துக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் நிலவியது. நடிகர் சுஷாந்த் சிங் மரணம், போதை பொருட்கள், வாரிசு அரசியல் என பல்வேறு விவகாரங்களில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கங்கனா ரனாவத் தாக்கினார். 

சிவ சேனா

தற்போது சிவ சேனாவின் கிளர்ச்சியின் எம்.எல்.ஏ.க்களால் முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்ததை கங்கனா ரனாவத் கிண்டல் செய்துள்ளார். கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் அவர் பேசிய வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்து இருந்தார். அந்த வீடியோவில் கங்கனா ரனாவத் பேசியிருப்பதாவது: 2020ல் ஜனநாயகம் என்பது நம்பிக்கை என்றும், அதிகாரத்தின் மீதான இந்த நம்பிக்கையை உடைப்பவரின் பெருமையும் உடைவது உறுதி என்றும் கூறியிருந்தேன்.

பா.ஜ.க.

ஹனுமான் ஜி சிவ பெருமானின் பன்னிரண்டாவது அவதாரம் என்று நம்பப்படுகிறது. எனவே ஹனுமான் சாலிசாவை தடை செய்ய சிவ சேனா முடிவு செய்யும் போது, சிவனால் கூட அவர்களால் காப்பாற்ற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோவின் தலைப்பாக, பாவம் பெருகும் போது, அழிவும் பிறகு படைப்பும்.. வாழ்வின் தாமரை மலருகிறது என பதிவு செய்து இருந்தார்.