ஓபிஎஸ் பக்கம் திரும்பிய முன்னாள் அமைச்சர் காமராஜ்?

 
invitation

மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் உறவினர் திருமண விழா  பத்திரிக்கையில்  இ.பி.எஸ், ஒ. பி.எஸ். படத்துடன்  பத்திரிக்கை  அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக மோதல்

திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடியில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜின் உறவினரின் திருமணம் மன்னார்குடியில்  நடைபெற்றது. இதில் திருமண வாழ்த்து தெரிவிப்பதற்காக ப்ளக்ஸ் பேனர்   அச்சிடப்பட்ட போஸ்டர்களில் ஒ.பி.எஸ். அணியை சேர்ந்த  முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் படமும், இ.பி.எஸ்.அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் ஆகியோரின் படமும் இடம்பெற்றுள்ளது. மேலும் திருமண பத்திரிகையிலும் ஒ.பி.ஸ், இ.பி.எஸ் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளது. 

திருமணத்திற்கு வந்தவர்கள் திருமண பத்திரிக்கை மற்றும் போஸ்டர்களை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதிமுகவில் ஒ.பி.எஸ்,இ.பி.எஸ் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வரும் சூழ்நிலையில் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது   அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு வெளியான நிலையில் திருமண பத்திரிக்கை,மற்றும் வாழ்த்து போஸ்டர்களில் ஒ.பி.ஸ். இ.பி.எஸ், படங்கள் இடம்பெற்றது அதிமுகவினர் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்களிடையே மிகப்பெரிய சலசலப்பை  ஏற்படுத்தியுள்ளது.