காங்கிரஸ் விரைவில் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் என்பதை அனைவரிடமும் பெருமையாக சொல்லுங்கள்.. கமல்நாத்

 
மத்திய பிரதேச காங்கிரஸ் ஆட்சியை கவிழ்பதற்கு டைம் தேவைப்பட்டதால் லாக்டவுனை மத்திய அரசு தாமதமாக அமல்படுத்தியது….. கமல்நாத் பகீர் குற்றச்சாட்டு…

காங்கிரஸ் விரைவில் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் என்பதை அனைவரிடமும் பெருமையாக சொல்லுங்கள் என்று காங்கிரஸ் தொண்டர்களிடம் அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் 230 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் அல்லது அதற்கு முன்னதாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. மேலும் அதற்கான தீவிரமாக பணியாற்றி வருகிறது.  இதன் ஒரு பகுதியாக மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான கமல் நாத் தனது வீட்டில், காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்களை சந்தித்தார். 

காங்கிரஸ்

காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்கள் மத்தியில் கமல் நாத் பேசுகையில் கூறியதாவது: காங்கிரஸ் விரைவில் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் என்பதை அனைவரிடமும் பெருமையாக சொல்லுங்கள். ஒட்டு மொத்த மாநிலத்தின் கருத்துக்களை கருத்தில் கொண்டு, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று கட்சி  தொண்டர்கள் பெருமையுடன் கூறலாம்.மண்டலம், துறை மற்றும் பூத் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அடுத்து பன்னா பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

ஜெயப்பிரகாஷ் அகர்வால்

இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.பி.யும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மத்திய பிரதேச காங்கிரஸின் பொறுப்பாளருமான ஜெயப்பிரகாஷ் அகர்வால் கூறுகையில், மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அனைத்து மாநில கட்சி தலைவர்களும், தொண்டர்களும்  தயாராக உள்ளனர். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸூக்கு வலுவான பிடிப்பு உள்ளது. மேலும் வரவிருக்கும் தேர்தலுக்கு தொண்டர்கள் ஒற்றுமையுடனும், ஆர்வத்துடனும் தயாராக வேண்டும் என தெரிவித்தார்.