பா.ஜ.க.வில் சேர விரும்புபவர்கள் போகலாம், நாங்கள் யாரையும் தடுக்க விரும்பவில்லை... கமல் நாத்

 
கமல் நாத்

பா.ஜ.க.வில் சேர விரும்புபவர்கள் போகலாம், நாங்கள் யாரையும் தடுக்க விரும்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத் தெரிவித்தார்.

காங்கிரஸிருந்து சமீபகாலமாக பல முக்கிய தலைவர்கள் விலகி வருகின்றனர். குறிப்பாக அண்மையில் சுமார் 50 ஆண்டு காலமாக காங்கிரஸிலிருந்து குலாம் நபி ஆசாத் விலகினார். கடந்த வாரம் கோவாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் கமல் நாத்தின் நெருங்கிய உதவியாளரும், மத்திய பிரதேச முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அருணாதய் சவுபே காங்கிரஸிலிருந்து விலகினார். 

குலாம் நபி ஆசாத்

இந்நிலையில் காங்கிரஸிலிருந்து பலர் வெளியேறுவது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத் கூறியதாவது: நீங்க என்ன யோசிக்கிறாய்? காங்கிரஸ் அழியுமா? சிலர் பா.ஜ.க.வில் சேர விரும்புவதாகச் சொல்கிறீர்கள். பா.ஜ.க.வில் சேர விரும்புபவர்கள் போகலாம். நாங்கள் யாரையும் தடுக்க விரும்பவில்லை. அவர்கள் (காங்கிரஸ் தலைவர்கள்-நிர்வாகிகள்) சென்று அவர்களின் எதிர்காலத்தை பார்க்க விரும்பினால், அவர்களின் எண்ணங்கள் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுகின்றன. 

பா.ஜ.க.

அவர்கள் பா.ஜ.க.வுக்கு சென்று இணைய எனது காரை கடனாக கொடுப்பேன். யாரையும் சமாதானப்படுத்துவதில் நம்பிக்கை இல்லை. கட்சியில் இருக்கும் யாருக்கும் எந்த அழுத்தமும் இல்லை. காங்கிரஸில் உள்ளவர்கள் அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறார்கள். கட்சியில் இருந்து அவர்கள் மீது எந்த அழுத்தமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.