எனக்கு காங்கிரஸ் தலைவர் பதவியில் விருப்பம் இல்லை.. மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல் நாத்

 
கொரோனாவை காரணம் காட்டி அவகாசம் பெற்ற கமல்நாத்! – தற்காலிகமாக தப்பினார்

எனக்கு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருப்பம் இல்லை என்று அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல் நாத் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ராகுல் காந்தி உள்பட காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் யாரும் போட்டியிட போவதில்லை என்று உறுதியானதையடுத்து, அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. இருப்பினும், தற்சமயம் சசி தரூர், அசோக் கெலாட் ஆகிய இருவரும் தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

அசோக் கெலாட்

இந்நிலையில், மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல் நாத் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறப்பட்டது. இதனை உறுதி செய்வது போல், கடந்த திங்கட்கிழமையன்று டெல்லி சென்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்து பேசினார். ஆனால் காங்கிரஸ் தலைவர் பதவியில் விருப்பம் இல்லை என்று கமல் நாத் தெரிவித்தார். டெல்லியில் கமல் நாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு தலைவர் பதவியில் விருப்பம் இல்லை, நவராத்திரி வாழ்த்துக்களுக்காக மட்டுமே இங்கே வந்தேன் என தெரிவித்தார்.

சோனியா காந்தி

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இம்மாதம் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். தற்சமயம் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. கடைசி நாளான வெள்ளிக்கிழமையன்று சசி தரூர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ராஜஸ்தான் காங்கிரஸில் நடக்கும் கலகத்தால் அசோக் கெலாட் மீது காங்கிரஸ் தலைமை அதிருப்தியில் உள்ளது. மேலும், அசோக் கெலாட்டை காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது ஒரு தரப்பினர் சோனியா காந்தியை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.