மத்திய பிரதேச அரசியலில் எதிர்பாராத திருப்பம்.. சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த கமல் நாத்

 
கமல் நாத்

மத்திய பிரதேச சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கமல் நாத் ராஜினாமா செய்தார்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.எல்.ஏ.வுமான கமல் நாத்  இருந்து வந்தார். 2023ம் ஆண்டு இறுதியில்தான் மத்திய பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கே.சி.வேணுகோபால்

இந்த சூழ்நிலையில், மத்திய பிரதேச சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கமல் நாத் ராஜினாமா செய்தார்.  கமல் நாத்தின் ராஜினாமாவை காங்கிரஸ் தலைமையையும் ஏற்றுக் கொண்டுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று கமல்நாத்துக்கு எழுதிய கடிதத்தில், மத்திய பிரதேச காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடனடியாக ஏற்றுக் கொண்டார் என்பதை தெரிவிக்கவே இது.

 கோவிந்த் சிங்

மத்திய பிரதேசத்தின் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவராக உங்கள் பங்களிப்பை கட்சி முழு மனதுடன் பாராட்டுகிறது. மத்திய பிரதேச காங்கிரஸ் சட்டப்பேரவையின் தலைவராக டாக்டர் கோவிந்த் சிங்கை நியமிக்கும் முன்மொழிவுக்கு காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கோவிந்த் சிங் அந்த கட்சியின் மூத்த தலைவரும், லஹார் தொகுதியின் எம்.எல்.ஏ.வும் ஆவார்.