தெலங்கானாவில் பா.ஜ.க.வுக்கு அமைப்பு பலம் இல்லை, பிற கட்சிகளின் தலைவர்களை மிரட்டி தங்களுடன் இணைத்து வருகின்றனர்... கவிதா

 
கவிதா

தெலங்கானாவில் பா.ஜ.க.வுக்கு அமைப்பு பலம் இல்லை. எனவே அவர்கள் (பா.ஜ.க.வினர்) தங்கள் அதிகாரத்தையும் பணத்தையும் தவறாக பயன்படுத்தி மற்ற கட்சிகளின் தலைவர்களை மிரட்டி தங்களுடன் இணைத்து வருகின்றனர் அம்மாநில சட்டமேலவை உறுப்பினர் கவிதா குற்றம் சாட்டினார்.

தெலங்கானா மாநிலம் யெல்லாரெட்டியில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி கூட்டத்தில் தெலங்கானா முதல்வரின் மகளும், அம்மாநில சட்டமேலவை உறுப்பினருமான கல்வகுந்த்லா கவிதா பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க. போதிக்கும் ஒரே கொள்கை ராம் ராம் என்று முழக்கமிட்டு, நம் தலைவர் ஒரு அந்நியன். எங்கு பா.ஜ.க. தனது குதிரை பேர முயற்சியில் தோல்வியுற்றால் அங்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்களை துன்புறுத்துவதற்கு மத்திய அமைப்புகளை பயன்படுத்துகிறது அல்லது அவர்களை வேட்டையாட முயற்சிக்கிறது. 

பா.ஜ.க.

பா.ஜ.க.வினர் எந்த தவறும் செய்யவில்லை என்றால், ஏன் சிறப்பு விசாரணை குழு விசாரணையை தவிர்த்து விட்டு நீதிமன்ற கதவுகளை தட்டுகிறார்கள். தெலங்கானாவில் பா.ஜ.க.வுக்கு அமைப்பு பலம் இல்லை. எனவே அவர்கள் தங்கள் அதிகாரத்தையும் பணத்தையும் தவறாக பயன்படுத்தி மற்ற கட்சிகளின் தலைவர்களை மிரட்டி தங்களுடன் இணைத்து வருகின்றனர். 

சி.பி.ஐ., அமலாக்கத்துறை

நாங்கள் தெலங்கானா மக்கள், எங்களை அச்சுறுத்த முடியாது, போராடுவோம், வெல்வோம், எப்போதும் நமது மக்களுக்கு சேவை செய்வோம். அதிகளவில் மக்களை ஈர்க்கும் தலைவர்கள் குறிப்பாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் பிரபல முகங்கள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க.வால் துன்புறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.