துரதிர்ஷ்டவமாக ராகுல் காந்தி வித்தியாசமான அணுகுமுறையை எடுக்கிறார்... காங்கிரஸ் மூத்த தலைவர் வேதனை

 
ராகுல் காந்தி

துரதிர்ஷ்டவமாக ராகுல் காந்தி வித்தியாசமான அணுகுமுறையை எடுக்கிறார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.வி. தாமஸ் வேதனை தெரிவித்தார்.

2020ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் அவசியம் என்பதை வலியுறுத்தி ஜிதின் பிரசாதா, கபில் சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் உள்பட அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இது அந்த கட்சிக்குள் பெரும் பிரளயத்தை உருவாக்கியது. இந்த சூழ்நிலையில் அண்மையில் ஜி 23 தலைவர்களில் ஒருவரான குரியன், ராகுல் காந்தி கட்சியின் மூத்த தலைவர்கள் யாரையும் கலந்தாலோசிப்பதில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவர் காந்தி குடும்பத்தை சேர்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்து இருந்தார். இந்த அந்த கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது.

குரியன்

ராகுல் காந்தி குறித்த குரியன் கருத்தை அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.வி. தாமஸ் ஒரளவு ஆதரவு தெரிவித்துள்ளார். கே.வி. தாமஸ் இது தொடர்பாக கூறியதாவது: கட்சியில் உறுப்பினர் இல்லாமல் கட்சி வாடி விடும். மறைந்த ராஜீவ் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் எனக்கு நல்லுறவு உள்ளது. துரதிர்ஷ்டவமாக ராகுல் காந்தி வித்தியாசமான அணுகுமுறையை எடுக்கிறார்.

கே.வி. தாமஸ்

அவர் (ராகுல் காந்தி) மீது எனக்கு கோபம் இல்லை. நான் வேதனை மட்டுமே படுகிறேன். காங்கிரஸ் இல்லாத பட்சத்தில், நாட்டில் வகுப்புவாத வன்முறைகள் அதிகமாக நிலவும். இந்த அடிப்படையில் ராகுல் காந்தி அல்லது அவரது குடும்பத்தில் யாரேனும் ஒருவர் தலைமை ஏற்க வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம். அல்லது பிரியங்கா காந்தி ஏற்கலாம். சோனியா காந்தி இயல்பாகவே அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவர். ஆனால் உடலநலக் காரணங்களால் அவரால் முன்வரை முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.