நல்ல நாள் என்று வாக்குறுதி அளித்தீர்கள்.. ஆனால் உங்கள் அரசாங்கம் கொடுத்தது இதுதான்.. மோடியை தாக்கிய கே.டி. ராம ராவ்

 
மோடி

8 ஆண்டுகளுக்கு முன் நல்ல நாள் என்று வாக்குறுதி அளித்தீர்கள் ஆனால், ரூபாய் மதிப்பு சரிவு, வேலையின்மை போன்றவற்றைத்தான் உங்கள் அரசாங்கம் கொடுத்தது என பிரதமர் மோடியை தெலங்கானா அமைச்சர் ராம ராவ் தாக்கினார்.

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவரும், அம்மாநில அமைச்சருமான கே.டி. ராம ராவ் டிவிட்டரில் தொடர்ச்சியான பதிவுகளில், 2014 மே 16ம் தேதியன்று  பிரதமர் மோடி பதிவு செய்து இருந்த டிவிட்டை பதிவேற்றம் செய்து, அன்புள்ள மோடி ஜி, 8 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நீங்கள் நல்ல நாள் என்று உறுதியளித்தீர்கள். 

கே.டி.ராம ராவ்

உங்கள் அரசாங்கம் என்ன வழங்கியுள்ளது. ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.77.80ஆக குறைந்துள்ளது, 45 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வேலையின்மை, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக பணவீக்கம், உலகிலேயே அதிக விலைக்கு எல்.பி.ஜி. (சமையல் கியாஸ் சிலிண்டர்), 42 ஆண்டுகளில் மோசமான பொருளாதாரம். வெல் டன் சார் என பதிவு செய்துள்ளார்.

வாட் வரி

அண்மையில், பிரதமர் நரேந்திர மோடி, எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்குமாறு மாநிலங்களை கேட்டுக் கொண்டார். இதனையடுத்து பிரதமர் மோடியை கே.டி. ராம ராவ் கடுமையாக சாடினார். மேலும், நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் வரியை ரத்து செய்யுமாறு மத்திய அரசை கே.டி. ராம ராவ் வலியுறுத்தினார்.