பாஜகதான் அதிமுகவை இயக்குகிறது- கே.எஸ்.அழகிரி

 
ks

அதிமுகவில் உள்ள  தலைவர்கள் பாஜகவின் பிடியில் இருந்து வெளியே வரவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

DMK natural ally of Congress: TNCC president KS Alagiri || DMK natural ally  of Congress: TNCC president KS Alagiri

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் நாகூர் தர்காவிற்கு இன்று வருகை புரிந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலம் பெற நாகூர் ஆண்டவர் சன்னதியில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “அக்னி பாதை திட்டம் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கும் அமைப்பு. பாஜகவின் வாக்கு வங்கிக்கு ஆட்கள் தேவை. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும். பாஜக வரைவு திட்டத்திற்கு அனுமதி கொடுத்தபோது, அதனை அப்போதைய அதிமுக அரசு எதிர்த்து போராடாததுதான் தற்போது மேகதாதுவில் அணைக்கட்டும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. பாஜக- தான் அதிமுகவை இயக்கிறது. அதிமுகவில் உள்ள தலைவர் பாஜகவின் பிடியில் இருந்து வெளியே வரவேண்டும்” என்று கூறினார்.