அடுத்த உலக போர் பாரதிய ஜனதா கட்சியால் தான் உருவாகும் - கே.எஸ்.அழகிரி

 
ks

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் உள்ள ஒரு தனியார்  ரிசார்டில் உதய்பூர் காங்கிரஸ் கொள்கைப் பிரகடனம் பயிற்சி முகாம் தொடங்கியது. அகில இந்திய காங்கிரஸ் தமிழக மேலிட பொருப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி துவக்கி வைத்தார். இந்த பயிற்சி முகாமில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி குறித்து தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கருத்துரை வழங்கி பேசினர். இதில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் இ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி.தங்கபாலு, மற்றும் சுதர்சன நாச்சியப்பன், விஜயதாரினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Congress leader KS Alagiri against release of Rajiv Gandhi killer convicts  - Congress- leader- KS Alagiri- Rajiv Gandhi assassination- convicts-  political parties- DMK- Perarivalan | Thandoratimes.com |

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, “மேகதாது ஆணை விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்திற்கு துரோகம் விளைவித்து விட்டார்கள். கர்நாடகா அரசின் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து விட்டார்கள். காவிரி ஆறு எந்த எந்த மாநிலத்தில் ஓடுகிறதோ அந்த மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் அனுமதி அளித்துள்ளதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்பாட்டம் நடத்த தீர்மானம் எடுத்துள்ளோம்.

 பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா ஒரு தொலைகாட்சி விவாதத்தின் போது ஒட்டுமத்த இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார் இஸ்லாமியர்களை பற்றி பேசுவதற்கு முல்லா இருக்கிறார்,கிறிஸ்தவர்களை பற்றி பேசுவதற்கு பிஷப் இருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி அவர்களை பற்றி பேச வேண்டியது தேவையில்லை. இவர்களால் தான் உலக போர் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது” என தெரிவித்தார்.