சசி தரூரும் கட்சியும் ஒற்றுமையாக உள்ளது, அவர் காங்கிரஸ் கட்சியின் சொத்து.. கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன்

 
கே.சுதாகரன்

சசி தரூரும் கட்சியும் ஒற்றுமையாக உள்ளது. அவர் எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு சொத்தாகவே இருந்து வருகிறார் என்று கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் தெரிவித்தார்.

கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் கேரள சுற்றுப்பயணம் விவகாரம், கட்சி மறுசீரமைப்பு, மாநிலத்தில் போதைப்பொருள் விற்பனை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். கே.சுதாகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சசி தரூர் கட்சி கட்டமைப்பிற்குள் பணிபுரிந்துள்ளார். அவரை யாராலும் தனித்து விட முடியாது. சசி தரூரின் திறன் கட்சியின் சொத்து. சசி தரூரும் கட்சியும் ஒற்றுமையாக உள்ளது. அவர் எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு சொத்தாகவே இருந்து வருகிறார். 

சசி தரூர்

கேரளாவில் பள்ளிக் குழந்தைகள் கூட போதைக்கு அடிமையாகிறார்கள். போதை பொருள் விற்பனை செய்பவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். மாநிலத்தில் போதைப்பொருட்களுக்கு பின்னால் டி.ஒய்.எஃப்.ஐ. உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கைதிகள் உள்ள சிறைகள் போதையில் உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  குற்றவாளிகள் சிறைகளை தவறாக பயன்படுத்துகின்றனர். போதைப்பொருளுக்கு எதிராக மாநில அளவிலான போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரங்களை காங்கிரஸ் நடத்தும். இந்த நெறிமுறையற்ற செயல் நிறுத்தப்பட வேண்டும். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

விவசாயத் துறைதான் முக்கியமாக கேரள காங்கிரஸின் அரசியல் விவகார குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கொள்முதலை கூட நடத்த முடியாமல் திறமையின்மைக்கு ஒத்ததாக மாநில அரசு மாறி விட்டது. விவசாயத் துறையை காக்க காங்கிரஸ் ஒரு போராட்டத்தை தொடங்கும். பயிகளின் விலையை உயர்த்தி பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசை நாங்கள் கோருகிறோம். கேரள காங்கிரஸின் மறுசீரமைப்பு 3 மாதங்களுக்குள் நிறைவு அடையும். இதற்கு அகில இந்திய காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. செயலற்றவை மட்டுமே மாற்றப்படும். தீவிரமானமாற்றம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.