பாஜக தொண்டர்கள் மீது கைவைத்தால் தக்க பதிலடி! முக ஸ்டாலினுக்கு கேபி ராமலிங்கம் எச்சரிக்கை

 
கேபி ராமலிங்கம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் பாரதமாதாவின் உருவப்படத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி இராமலிங்கம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மு.க.அழகிரியை பாஜகவில் இணைப்பதே என் குறிக்கோள்- கே.பி ராமலிங்கம் My goal is  to join MK Alagiri in the BJP says KP Ramalingam – News18 Tamil

தருபுரியில் பாரத மாதா சிலை உள்ள கோவிலின் பூட்டை உடைத்து மாலை அணிவித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதியப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு இராசிபுரத்தில் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட பாரத மாதா சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய  கே.பி இராமலிங்கம், “இனி பாஜக தொண்டர்கள் யார் மீதேனும் கை வைத்தால் பாஜக தக்க பதிலடி கொடுக்கும். பாஜகவை பொறுத்தவரை சிறையை காட்டி எங்களை மிரட்டி விடமுடியாது. நாளை முதல் பாஜக வீறுகொண்டு எழுந்து என்ன மாதிரியான விஷயங்களை  தமிழக மக்களிடம் எடுத்து வைக்க போகிறோம் என்பதை முதல்வருக்கு உணர்த்துவோம். பாரத மாதாவின் சிலைக்கு மாலை அணிவித்ததை தடுக்க பார்த்ததின் பலனை இனி திமுக அனுபவிக்கும், பாஜகவை பொறுத்தவரை மிரட்டி பார்க்கலாம் என கருதினால் எதுவந்தாலும், எப்படி வந்தாலும் அதனை எதிர்க்கொள்ள பாஜகவுக்கு துணிவு உண்டு” எனக் கூறினார்.