நரேந்திர மோடி பிரதமரான பிறகு பா.ஜ.க. குறைந்தபட்சம் 8 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்துள்ளது.. கே.சி. ராமராவ் குற்றச்சாட்டு

 
மோடி

நரேந்திர மோடி பிரதமரான பிறகு பா.ஜ.க. குறைந்தபட்சம் 8 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்துள்ளது என தெலங்கானா அமைச்சர் கே.சி.ராமராவ் குற்றம் சாட்டினார்.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகனும், தெலங்கானா முதல்வருமான கே.டி. ராமராவ் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி நிலவரம் குறித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை கடுமையாக தாக்கினார். கே.டி. ராமராவ் கூறியதாவது: மோடி பிரதமரான பிறகு,  மகாராஷ்டிராவில் மட்டுமல்ல சுமார் 8 வெவ்வேறு மாநிலங்களில் அவர்கள் (பா.ஜ.க.) ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டு, அரசாங்கங்களை அகற்றினர்.

பா.ஜ.க.

கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் கோவா,  இப்போது மகாராஷ்டிரா அதற்கு முன் பல மாநிலங்களில் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் அந்த மாநிலங்களில் இந்த செயல்களை மேற்கொண்டனர்.  அதனால்தான் இதனை அரசியலமைப்பு எந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது என்று சொல்கிறேன். சர்வாதிகாரம் உள்ளது. இந்த சர்வாதிகாரத்தை நிறுத்த யாராவது குரல் எழுப்ப வேண்டும். 

கே.டி.ராம ராவ்

ஒரு வேளை அந்த குரல் தெலங்கானாவில் இருந்து எழும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். எதிர்வரும் குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிப்பதாக தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.