விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை பா.ஜ.க. அரசின் திறமையின்மையை அம்பலப்படுத்துகின்றன.. கே.சந்திரசேகர் ராவ்

 
கே.சந்திரசேகர் ராவ்

மொத்த உள்நாட்டு வீழ்ச்சி, பணவீக்கம் உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரேல், டீசல் மற்றும் இதர விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் 8.3 சதவீதம் வரை அதிகரிப்பு ஆகியவை பா.ஜ.க. அரசின் திறமையின்மையை அம்பலப்படுத்துகின்றன என்று தெலங்கானா முதல்வர் குற்றம் சாட்டினார். 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் செய்தியாளார்களை சந்தித்து பேசினார். அப்போது கே.சந்திரசேகர் ராவ் கூறியதாவது: 1970களில் எமர்ஜென்சியை பிரகடனப்படுத்தும் அளவுக்கு தைரியமாக இருந்தவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. அதேசமயம் பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி உள்ளது. ஒரு பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் (நுபுர் சர்மா) முட்டாள்தனமாக பேசினார். மற்ற நாடுகளில் நம் பிரதிநிதிகள் மற்றும் தூதர்கள் மன்னிப்பு கேட்டார்கள். பா.ஜ.க. தவறு செய்திருந்தால் நாடு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். 

இந்திரா காந்தி

நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி பார்திவாலா (நுபுர் சர்மாவை கடுமையாக சாடியவர்கள்) நான் உங்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். இந்த தீமைகளிலிருந்து இந்தியாவை காப்பாற்ற அதே மனப்பான்மையை கடைப்பிடிக்கவும். இந்த துரோகிகள், பேய்கள், சர்வாதிகாரிகள் ஆகியோரிடமிருந்து நீதித்துறை நாட்டை காப்பாற்ற வேண்டும். நரேந்திர மோடி அரசு போக வேண்டும், பா.ஜ.க. அல்லாத அரசு வர வேண்டும். இது எங்களின் முழக்கம். நரேந்திர மோடிக்கு நன்றி, இரட்டை என்ஜின் அரசாங்கம் என்ற இரட்டை என்ஜின் வளர்ச்சிக்கான உங்கள் திட்டத்தை ஏற்கிறோம். இனி எந்த இரட்டை என்ஜின் வர வேண்டும், அது பா.ஜ.க. இரட்டை என்ஜினாக வேண்டுமா அல்லது பா.ஜ.க. அல்லாத இரட்டை என்ஜினாக வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். 

பா.ஜ.க.

நாட்டுக்கு பா.ஜ.க. அல்லாத இரட்டை என்ஜின் அல்லாத என்ஜின் ஆட்சி தேவை என்பதை உண்மைகளும், புள்ளிவிவரங்களும் தெளிவாக கூறுகின்றன. மத்திய அரசின் புதிய ராணுவ திட்டமான அக்னிபாத் போன்ற திட்டங்களை இறுதி செய்வதற்கு முன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மற்ற கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களை நம்பிக்கைக்கு உட்படுத்த வேண்டும். இராணுவத்தில் இளைய தலைமுறை தேவை என்கிறார்கள். நமது நாட்டுக்கு கூட இளம் பிரதமர் தேவை. மொத்த உள்நாட்டு வீழ்ச்சி, பணவீக்கம் உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரேல், டீசல் மற்றும் இதர விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் 8.3 சதவீதம் வரை அதிகரிப்பு ஆகியவை பா.ஜ.க. அரசின் திறமையின்மையை அம்பலப்படுத்துகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.