மகராஷ்டிராவில் பிராந்திய கட்சிகள் உள்ளதால்தான் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.. ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த கவிதா

 
கவிதா

மகராஷ்டிராவில் பிராந்திய கட்சிகள உள்ளதால்தான் அங்கு காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது என ராகுல் காந்திக்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி மேலவை உறுப்பினர் கவிதா பதிலடி கொடுத்தார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அண்மையில் காங்கிரஸின் சிந்தன் ஷிவிர் என்னும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ராகுல் காந்தி பேசுகையில், பிராந்திய கட்சிகள் சித்தாந்தம் இல்லாததால் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.-ஐ எதிர்த்து போராட முடியாது. காங்கிரஸால் மட்டுமே போராட முடியும் என தெரிவித்து இருந்தார். பிராந்திய கட்சிகள் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பதிலடி கொடுத்துள்ளது. 

ராகுல் காந்தி

தெலங்கானா முதல்வரும் கே.சந்திரசேகர் ராவின் மகளும், தெலங்கானா மேலவை உறுப்பினருமான கவிதா கூறியதாவது: காங்கிரஸ் கட்சியை போல் பிராந்திய கட்சிகளுக்கு தலைமை நெருக்கடி இல்லை. காங்கிரஸ் தங்கள் கட்சியை மீட்டெடுப்பது குறித்து ஆலோசித்தது. நம் நாடு வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வகுப்புவாத சீர்கேட்டால் தத்தளிக்கிறது. பிராந்திய கட்சிகளின் வெற்றி குறித்து அவர்கள் (காங்கிரஸ் தலைவர்கள்) வேதனை தெரிவித்தனர். 

காங்கிரஸ், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ்

நாங்கள் செயல்படுவதால் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். காங்கிரஸை போலல்லாமல், எங்களுக்கு தலைமை நெருக்கடி இல்லை. பிராந்திய கட்சிகளுக்கு மக்களுக்கான தெளிவான செயல் திட்டம் உள்ளது, மகாராஷ்டிராவில் கூட பிராந்திய கட்சிகள் உள்ளதால்தான் அங்கு காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது என்பதை ராகுல் ஜி புரிந்து கொள்ள வேண்டும். மகாராஷ்டிராவில் காங்கிரஸ் வால் கட்சி, நாளை அது நாட்டில் வால் கட்சியாகும். பிராந்திய கட்சிகள் முன்னிலை வகிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.