அரசியலில் ஒரு தரமான மாற்றத்தை கொண்டு வர ஜனாதிபதி தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு.. சந்திரசேகர் ராவ்

 
கே.சந்திரசேகர் ராவ்

இந்திய அரசியலில் ஒரு தரமான மாற்றத்தை கொண்டு வர குடியரசு தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா  தெலங்கானாவில் டி.ஆர்.எஸ்., காங்கிரஸ் மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக ஹைதராபாத் சென்றார். பேகம்பேட் விமான நிலையத்தில் வந்து இறங்கிய யஷ்வந்த் சின்ஹாவை தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் நேரில் சென்று வரவேற்றார். மேலும், சின்ஹாவை வரவேற்று டி.ஆர்.எஸ். கட்சியினர் மாபெரும் பைக் பேரணி நடத்தினர்.

யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்ற கே.சந்திரசேகர் ராவ்

விமான நிலையம் முதல் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரித்து கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஜல் விஹார் வரை டி.ஆர்.எஸ். கட்சியினர் பைக் பேரணியை நடத்தினர். யஷ்வந்த் சின்ஹாவை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் பேசுகையில் கூறியதாவது: இந்திய அரசியலில் ஒரு தரமான மாற்றத்தை கொண்டு வர குடியரசு தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இந்தியாவின் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு அதிகரித்து வரும் பணவீக்கத்துடன் நகைச்சுவையாக மாறி விட்டது.

யஷ்வந்த் சின்ஹா

சீனாவில் குறைவான பேச்சு மற்றும் அதிக நடவடிக்கை (செயல்) உள்ளது. எனவே அதன் விளைவு அதன் வேகமாக பொருளாதாரம். இங்கே அனைத்தும் பேச்சு ஆகையால் விளைவு இல்லை. மேக் இந்தியா என்பது ஒரு பெரிய பொய். மக்கள்  வேலையிழக்கிறார்கள் மற்றும் தொழிலாளர்கள் சாலையில் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா பேசுகையில், குடியரசு தலைவர் தேர்தல் இரண்டு சித்தாங்களுக்கு இடையிலான போராட்டம். தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்முவை விட நான் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அதிகமான அரசியலமைப்பு உடையவராக இருப்பேன். தற்போதைய அரசாங்கத்துக்கு  எதிரான எனது போராட்டத்தில் இது ஒரு அத்தியாயம் என்று தெரிவித்தார்.