ராகுல் காந்தியின் இமேஜை கெடுக்கும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது... காங்கிரஸ்

 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என தகவல்..

ராகுல் காந்தியின் இமேஜை கெடுக்கும் ஏற்படுத்தும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் கே.சி. வேணுகோபால் குற்றம் சாட்டினார்.

மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பேசுகையில் கூறியதாவது: நாட்டின் பிரதமர் மற்றும் தலைவர் யார் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். மக்கள் மீது காங்கிரஸ் நம்பிக்கை வைத்துள்ளது. இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நோக்கம் ராகுல் காந்தியை தேசத்தின் பிரதமராக தேர்ந்தெடுப்பது அல்ல. மற்றவர்கள் யாத்திரையின் முக்கியத்துவத்தை குறைக்கக்கூடாது. 

கே.சி.வேணுகோபால்

ராஜஸ்தான் தொடர்பான பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காணப்படும். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும். ராகுல் காந்தியின் இமேஜை கெடுக்கும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. ராகுல் காந்தியின் உண்மை முகத்தை மக்கள் பார்க்கிறார்கள். அவர் நன்கு படித்தவர், இரக்கமுள்ளவர், உறுதியானவர். இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போது, ராகுல் காந்தி எழுப்பிய பிரச்சினைகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ராகுல் காந்தியின் செய்த தியாகத்தின் அளவை மக்கள் முதல் நாளிலிருந்தே உணர்ந்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க.

இந்திய ஒற்றுமை நடைப்பயண திட்டத்தின்படி, ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மொத்தம் 3,500 கி.மீ. தொலைவை 5 மாதங்களில் நிறைவு செய்கிறார். இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கும்.  ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தமிழ்நாடு,  கேரளா, கர்நாடகா, தெலங்கானா,மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை கடந்து தற்போது மத்திய பிரதேசத்தில் நடந்து கொண்டிருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் இந்திய ஒற்றுமை பயணம் ராஜஸ்தானில்  நுழைகிறது.