இனிமேல் பார்க்கத்தானே போறீங்க... சசிகலா ஆவேசம்

 
sa

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் 72 நாட்களுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். அவருக்கு தடபுடலான வரவேற்பு வழங்கினர் கட்சியினர்.  இந்த தடபுடல் வரவேற்பில் நெகிழ்ந்து போன எடப்பாடி பழனிச்சாமி,  கட்சியில் அனைத்து பொறுப்புகளில் உள்ளோருக்கும் நன்றி தெரிவித்து அறிககி வெளியிட்டிருக்கிறார்.  அதில்,  அதிமுக நிறுவன தலைவர் எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதாவின் நல்லாசியோடும்,  அதிமுக நிர்வாகிகள்,  கட்சித் தொண்டர்களின் ஒத்துழைப்போடும் சிறந்த முறையில் கட்சியை வழிநடத்தி மீண்டும் அதிமுக ஆட்சி மலர்வதற்கு இரவு, பகல் பாராமல் அயராது பணியாற்றுவேன் என்ற உறுதியை மனதார அளிக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.

e

இந்த நிலையில்,  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அமைந்திருக்கும் சாய்பாபா கோவில் கும்பாபிஷேகத்திற்கு சசிகலாவும் அவரது சகோதரர் திவாகரனும் சென்று சாமி தரிசனம் செய்தனர்.  அதன் பின்னர் செய்தியாளர்கள் சசிகலா பேசிய போது,  ஓபிஎஸ் வந்தால் சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு,  அதிமுக பொதுச் செயலாளர் பொதுமக்களும் கழக உடன்பிறப்புகளும் முடிவு செய்ய வேண்டிய விஷயம்.   ஓபிஎஸ் மட்டுமல்ல யார் வந்தாலும் நான் சந்திப்பேன் என்று தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் தற்போதைய அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் உங்களிடம் தொடர்பில் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு , பொருத்திருந்து பாருங்கள் என்றார்.

எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்று இன்று அதிமுக தலைமை அலுவலகம் தடபுடலாக சென்றிருப்பது குறித்த கேள்விக்கு,  இனிமேல் பார்க்கத்தானே போறீங்க என்று சஸ்பென்ஸ் வைத்தார்.