அமைச்சர் செந்தில்பாலாஜியை கொந்தளிக்க வைத்த ஜூனியர் விகடன் கட்டுரை - வழக்கு தொடரப்போவதாக ஆவேசம்

 
ஜு

திமுகவில் கரூர் மாவட்டச் செயலாளராக இருக்கும் செந்தில்பாலாஜி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக உள்ளார்.  டாஸ்மாக் மூலமாக செந்தில் பாலாஜி அதிகம் பணம் சம்பாதித்து கொடுக்கிறார் திமுகவுக்கு.   அதன் மூலமாக இவரும் அதிகம் கமிஷன் வாங்கிக் கொண்டிருக்கிறார் என்று பாஜகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.  இதனாலேயே ‘சாராய அமைச்சர்’ என்று செந்தில் பாலாஜியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களில்708 கோடி ரூபாய்க்கு மது  விற்பனை ஆகியிருப்பதாக சன் தொலைக்காட்சி உட்பட பல ஊடகங்களும், பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டு வந்தன.  உடனே இதை அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டித்தார்.  அது உண்மை தகவல் அல்ல என்று வரிந்து கட்டிக்கொண்டு பேசினார்.

ஜூ

 இதற்கு அண்ணாமலை,   கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம்.  இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? சாராயம் விற்றுப் பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரமிருந்தால், மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு உண்மையான செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்கும்? கோபாலபுரத்தின் குடும்ப தொலைக்காட்சியான சன் நியூஸ் இந்த சாராய விற்பனை மூலம் வந்த வருமானத்தை செய்தியாக வெளியிட்டுள்ளது. அவர்கள் மீதும் வழக்கு தொடுப்பீர்களா? 

அன்ன்

அவர்கள் மீது வழக்கு தொடுத்தாலும், உங்கள் நடவடிக்கைகளுக்கு எதிராக பாஜக குரல் கொடுக்கும்.   பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிடுவதற்கு முன் அறிவாலயத்தின் அனுமதி பெற வேண்டுமா?  அப்படியே உங்களுக்கு வழக்கு தொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் பத்திரிகையாளர்களை விட்டு விட்டு என் மீது வழக்குத் தொடுங்கள்.  சாராய அமைச்சரின் இந்த நடவடிக்கை  முதல்வரின்  வழிகாட்டுதலின் பெயரில் நடக்கிறதா அல்லது சாராய அமைச்சரே தன்னிச்சையாக செயல்படுகிறாரா?  என்று அடுக்கடுக்காக பலகேள்விகளை எழுப்பி இருந்தார்.

வ்

இந்த நிலையில்,  அடாவடி வசூல்.. அள்ளிக்குவிக்கும் கரூர் கம்பெனி.. என்று ஜூனியர் விகடனில் அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து கட்டுரை வெளிவந்திருக்கிறது.   இதற்கு,  ‘’இதழியல் அறம் துளியுமின்றி, சரியும் வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள தொடர்ந்து அவதூறு, பொய்களைப் பரப்பி மஞ்சள் பத்திரிக்கை போல கீழ்த்தரமாகச் செயல்படும்  ஜூனியர் விகடன்  நிர்வாகத்தின் மீதும், சம்பந்தப்பட்ட நிருபர்கள் மீதும் நீதிமன்றத்தின் வாயிலாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.