காங்கிரஸ் கட்சிக்கு நீதித்துறை மீது மரியாதை இருந்திருந்தால், பிபிசி ஆவணப்படத்தை ஆதரித்திருக்க மாட்டார்கள்... ஜிதேந்திர சிங்

 
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநில அரசுகள்தான் பணியாளர்களின் சம்பளத்தை குறைத்துள்ளன… மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலடி…

காங்கிரஸ் கட்சிக்கு நீதித்துறை மீது மரியாதை இருந்திருந்தால், பிபிசி ஆவணப்படத்தை ஆதரித்திருக்க  மாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கடந்த சில தினங்களுக்கு முன், நீதித்துறை மீதான தாக்குதலுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக நிற்கவும், ஏழைகளின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் அழைப்பு விடுத்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி பேச்சு மற்றும் பிரச்சாரம் செய்வதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்று கடுமையாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் அண்மையில், காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கிய பிறகு அங்கு தீவிரவாதம் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் தலைவர்களின் கருத்துக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ்

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான ஜிதேந்திர சிங் கூறியதாவது: மல்லிகார்ஜூன் கார்கே என்ன சொன்னாலும் அது உண்மைக்கு முற்றிலும் மாறுப்பட்டது. அவருக்கு அவரது கட்சிக்காரர்களுக்கும் நீதித்துறை மீது மரியாதை இருந்திருந்தால், பிபிசி ஆவணப்படத்தை ஆதரித்திருக்க  மாட்டார்கள். கோத்ரா தொடர்பாக அப்போதைய குஜராத் அரசின் முதல்வருக்கு நீதிமன்றமே நற்சான்றிதழ் வழங்கியதை நான் ஏற்கவில்லை, எனவே இது நீதிமன்ற அவமதிப்பு அல்ல, இந்த வகையான அணுகுமுறை அவர்களிடம் (காங்கிரஸ்) உள்ளது. இது காங்கிரஸின் இரட்டை பேச்சு என்று நான் நினைக்கிறேன்.

பிபிசி, மோடி

முன்பு காஷ்மீருக்கு பா.ஜ.க. யாத்திரை செல்லுபோதெல்லாம், அது முரளி மனோகர் ஜியின் 1992 யாத்திரையாக இருந்தாலும் சரி, மோடியின் யாத்திரையாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் தீவிரவாதத்தை காரணம் காட்டி யாத்திரையை நிறுத்தியது. பள்ளத்தாக்கில் நடந்த தீவிரவாதத்திற்கு பா.ஜ.க. எவ்வாறு பொறுப்பாகும்?. காங்கிரஸ் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அவர்களின் சொந்த கட்சி (காங்கிரஸ்) ஒவ்வொரு நாளும் உடைந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.