அழைப்பிதழில் பெயர் போடவில்லை.. பிரதமர் மோடிக்கு விருது வழங்கும் விழாவை புறக்கணித்த உத்தவ் தாக்கரே..

 
வீர் சாவர்க்கர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது- உத்தவ் தாக்கரே பேச்சு

லதா மங்கேஷ்கர் விருது வழங்கும் விழாவிற்கான அழைப்பிதழில் முதல்வர் உத்தவ் தாக்கரே பெயரை போடாதன் மூலம் 12 கோடி மராத்தி மக்களை மங்கேஷ்கர் அவமதித்து விட்டார் என தேசியவாத காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் நினைவாக இந்த ஆண்டு முதல் லதா தீனநாத் மங்கேஷ்கர் விருது வழங்கப்படும் என தீனநாத் மங்கேஷ்கர் ஸ்மிருதி பிரதிஷ்தான் அறக்கட்டளை அறிவித்தது. நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தன்னலமற்ற சேவையாற்றிய நபருக்கு இந்த விருது ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும் என அறக்கட்டளை தெரிவித்தது. அந்த வகையில் முதல் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படும் என அறிவித்தது.

லதா தீனநாத் மங்கேஷ்கர் விருதை பெற்று கொண்ட மோடி

மும்பையில் நேற்று முன்தினம் லதா தீனநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி இந்த விழாவில் கலந்து கொண்டு விருதை பெற்றுக்கொண்டார். இந்த விருது வழங்கும் விழாவில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கலந்து கொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், லதா தீனநாத் மங்கேஷ்கர் விருது விழாவிற்கான அழைப்பிதழில் முதல்வர் உத்தவ் தாக்கரே பெயர் போடாததால், 12 கோடி மராத்தி மக்களை மங்கேஷ்கர் அவமதித்து விட்டார் என அம்மாநில அமைச்சர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

லதா தீனநாத் மங்கேஷ்கர் விருது அழைப்பிதழ்

மகாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜிதேந்திர அவாத் டிவிட்டரில், லதா மங்கேஷ்கர் விருது வழங்கும் விழாவிற்கான அழைப்பிதழை பதிவேற்றம் செய்து, லதா மங்கேஷ்கர் விருது வழங்கும் விழாவிற்கான அழைப்பிதழில் முதல்வரின் பெயரை (உத்தவ் தாக்கரே) குறிப்பிடுவதை மங்கேஷ்கர் குடும்பத்தினர் தவிர்த்தனர். அவர்களின் பங்கு புரிந்து கொள்ள முடியாதது, மங்கேஷ்கரின் இந்த செயல் 12 கோடி மராத்தி மக்களை அவமதிக்கும் செயலாகும் என பதிவு செய்துள்ளார்.