நான் கைது செய்யப்பட்டது, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி.. பிரதமர் அலுவலகம் வடிவமைத்த சதி.. மேவானி பகீர் தகவல்

 
பிரிவினை அரசியல் செய்பவர் ஒற்றுமைக்கான சிலையை திறக்கிறார்: ஜிக்னேஷ் மேவானி சாடல்

அசாம் காவல்துறையால் நான் கைது செய்யப்பட்டது, பிரதமர் அலுவலகம் வடிவமைத்த முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி குற்றம் சாட்டினார்.

குஜராத் மாநிலத்தில் பிரபலமான தலித் தலைவரும், வட்கம் சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜிக்னேஷ் மேவானியை அசாம் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த வழக்கில் ஜிக்னேஷ் மேவானிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் புதிய வழக்கில் ஜிக்னேஷ் மேவானியை அசாம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கிலும் அசாம் நீதிமன்றம் ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த ஜிக்னேஷ் மேவானி செய்தியாளர்களை நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஜிக்னேஷ் மேவானியை  அழைத்து செல்லும் போலீசார்

அசாம் காவல்துறையால் நான் கைது செய்யப்பட்டது, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி. இது ஒரு எம்.எல்.ஏ.வுக்கான நெறிமுறைகள் மற்றும் விதிகளை புறக்கணித்தது. இது பிரதமர் அலுவலகம் வடிவமைத்த சதி என்பது எனது குற்றச்சாட்டு. குஜராத் தேர்தல் விரைவில் வரவுள்ளது. என்னை அழிக்கவே இது செய்யப்படுகிறது. அவர்களால் கைப்பற்றப்பட்ட என் கணினியில் அவர்கள் எதையாவது விதைத்திருக்க எல்லா வாய்ப்புகளும் இருப்பதாக எல்லா வாய்ப்புகளும் இருப்பதாக அஞ்சுகிறேன். 

பிரதமர் மோடி

எனக்கு எதிரான அனைத்து வழக்குகளையும்  நீதிமன்றத்தில் எதிர்த்து போராடுவேன். உனாவில் தலித்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் எதிராக பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும், படிதார் சமூகத்தினர் தங்கள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான போராட்டத்தின்போது செய்தது போல் திரும்ப பெற வேண்டும். தேர்வு தாள்கள் கசிவு வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரிக்க வேண்டும். போதைப்பொருள் கைப்பற்றப்பட வழக்கில் முந்த்ரா துறைமுக ஆபரேட்டரை விசாரிக்க வேண்டும். இல்லையேல் வரும் ஜூன் 1ம் தேதி குஜராத் பந்த் நடத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.