எனது தந்தை எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர், ஆனால் நான் பா.ஜ.க.காரன்... ஜெயந்த் சின்ஹா விளக்கம்

 
ஜெயந்த் சின்ஹா

எனது தந்தை (ஜெயந்த் சின்ஹா) குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் நான் பா.ஜ.க.காரன் மற்றும் பா.ஜ.க. எம்.பி, எனது அரசியலமைப்பு கடமையை செய்வேன் என ஜெயந்த் சின்ஹா விளக்கம் அளித்தார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து வரும் ஜூலை 18ம் தேதியன்று குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. குடியரசு தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிருகிறார். எதிர்க்கட்சிகளனி  வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவின மகன் ஜெயந்த் சின்ஹா பா.ஜ.க. எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது. 

யஷ்வந்த் சின்ஹா

எனவே எதிர்வரும் குடியரசு தலைவர் தேர்தலில் குடும்பமா அல்லது கட்சியா என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்ற நிலையில் ஜெயந்த் சின்ஹா இருப்பார் பேசப்பட்டது. ஆனால் ஜெயந்த் சின்ஹாவோ நான் பா.ஜ.க.காரன் மற்றும் எம்.பி., எனது அரசியலமைப்பு கடமையை நிறைவேற்றுவேன் என தெரிவித்துள்ளார். ஜெயந்த் சின்ஹா டிவிட்டரில், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்மு ஜிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

திரௌபதி முர்மு

அவரது வாழ்க்கை எப்போதும் பழங்குடி சமூகம மற்றும் ஏழை நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு (முர்மு தேர்வுக்கு) பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது தந்தை யஷ்வந்த் சின்ஹா ஜி, எதிர்க்கட்சிகளால் குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். உங்களை அனைவரையும் இதனை (குடியரசு தலைவர் தேர்தல்) குடும்ப விவகாரமாக ஆக்கிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் பா.ஜ.க.காரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர். எனது அரசியலமைப்பு கடமையை நிறைவேற்றுவேன் என பதிவு செய்துள்ளார். அதாவது தந்தையாக இருந்தாலும் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாக்களிக்க மாட்டேன் பா.ஜ.க. வேட்பாளருக்குதான் வாக்களிப்பேன் என்பதை ஜெயந்த் சின்ஹா மறைமுகமாக கூறியதாக கூறப்படுகிறது.