அரசியலில் உதயநிதி ஒரு கத்துக்குட்டி - ஜெயக்குமார்

 
jayakumar

அமைச்சராக பதவியேற்க இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் ஒரு கத்துக்குட்டி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

Udhayanidhi Stalin funny reply to Minister Jayakumar goes Viral

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ஸ்டாலின் தனது கனவை நனவாக்கிக் கொண்டுள்ளார். குடும்ப கட்சியாக திமுக மாறிவிட்டது. திமுகவில் கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் உள்ளனர். கட்சிக்காக தியாகம் செய்தவர்கள் பலர் உள்ளனர். உதயநிதியை அமைச்சர் ஆக்குவதால் திமுக இனி ஒரு முடிந்த சகாப்தமாகவே பார்க்கப்படும். எப்போதும் ஆளுநர் தேவையில்லை எனக் கூறும் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு தனது பிள்ளைக்கு பட்டம் சூட்ட மட்டும் ஆளுநர் தேவையா. திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி, அதில் உதயநிதி ஸ்டாலின் இனிமேல் ஹெச்.ஆர் ஆக இருப்பார். 

நடிகர் சிவாஜி கணேசனுக்கு முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் பிறந்து இருந்திருந்தால் நடிப்பில் செவாலியராகவும், ஏன் ஆஸ்கர் அவார்டுக்கு கூட சொந்தக்காரராக ஆகியிருப்பார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதால் தமிழ்நாடு, அமெரிக்கா அல்லது லண்டனாக போவதில்லை” என விமர்சித்தார்.