நம்பிக்கை இழந்த ஜெயக்குமார்!

 
ஜ்

 உட்கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேசக் கூடாது என்கிற கட்சி விதிகளை மீறி ஜெயக்குமார் பேசியிருந்தார்.  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அனைவருக்கும்  செல்போன் உள்ளே எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.  இங்கு நடக்கும் தகவல் வெளியே யாருக்கும் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் செல்போன் பயன்படுத்த தடை செய்யப்பட்டிருந்தது .  இதனால் கடுப்பான முன்னாள் எம்பி மைத்ரேயன் கூட்டத்தை புறக்கணித்து சென்றார்.

 உள்ளே நடக்கும் விஷயங்கள் சிலரின் மூலமாக எப்படியும் வெளியே கசியத் தான் போகிறது.  ஆனால் கட்சியின் சீனியர் ஒருவரே,  உள்ளே என்ன நடந்தது என்பது குறித்து பொது வெளியில் பேட்டியளித்ததால் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.  ஒற்றைத்தலைமை வேண்டும் என்றுதான் உள்ளே எல்லோரும் வலியுறுத்தினார்கள் என்று போட்டுடைத்திருந்தார் ஜெயக்குமார்.

ஜ்

 உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசிய ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை செல்வராஜ் சொல்லியிருந்தார்.  கோவை செல்வராஜ் இப்படி சொல்லியிருப்பது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு,  தெருவில் போற கண்டவனுக்கு எல்லாம்  என்னால் பதில் சொல்ல முடியாது என்று எரிச்சல் பட்டிருக்கிறார் ஜெயக்குமார்.

 தனக்கு எம்பி சீட் கிடைக்காத காரணத்தினால் தான் ,  அதற்கு காரணம் அதிமுகவின் இரட்டை தலைமைதான் என்கிற காரணத்தினால்தான் எப்படியும் அதிமுகவை ஒற்றை தலைமைக்கு கொண்டுவந்து விடவேண்டும்.   தனது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியை  அந்த ஒற்றை தலைமைக்கு கொண்டு வந்துவிடவேண்டும் என்று துடிக்கிறார் ஜெயக்குமார் என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் .

பொதுக்குழுவில் என்ன எப்படி நடந்து கொள்வது என்பது குறித்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலேயே அதுகுறித்து  பேசாமல் ஒற்றை தலைமை குறித்து பேசியவர்கள்,  அந்த விவகாரம் தற்போது பெரிதாக வெடித்து இருக்கும் நிலையில் பொதுக்குழு பற்றி பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு ஜெயக்குமார்,  சிவி சண்முகம் உள்பட எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசித்து வந்தனர்.   இதை அறிந்த பன்னீர்செல்வம் அந்த ஆலோசனை கூட்டத்திற்கு செல்வதாக இருந்திருக்கிறார்.  அவர் அங்கு வரும் தகவல் அறிந்ததும் உடனடியாக ஆலோசனை கூட்டத்தை முடித்து விட்டு அங்கிருந்து எல்லோரும் எஸ்கேப் ஆகி இருக்கிறார்கள்.   அதில் முதலில் எஸ்கேப்பாகியது சண்முகம் என்கிறார்கள்.

ம்க்

 வெளியே வந்த ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது,   ஒற்றை தலைமை குறித்த கேள்விக்கு,   பொதுக்குழுவில் ஒற்றை தலைமை கோரிக்கை செயல்வடிவம் பெறலாம் பெறாமலும் போகலாம் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

கட்சி விதியையும் மீறி,  ஒற்றை தலைமைக்கு  குரல் கொடுத்து  அதற்காக தீவிரமாக போராடி வரும் ஜெயக்குமார்,  இப்படி நம்பிக்கை இல்லாமல் சொன்னதற்கு காரணம் என்ன?  ஒற்றைத் தலைமை விவகாரத்தை முடிவெடுக்கும் அதிகாரம் பொதுக்குழுவிற்கு கிடையாது.  செயற்குழுவில் எடுத்த தீர்மானத்தின் படி பொதுக்குழுவிற்கு அந்த அதிகாரம் இல்லை . அதையும் மீறி பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமைக்கு செயல்வடிவம் கொண்டுவந்தால் கட்சி ரீதியாக பெரிய பிரச்சனை எழும் என்று  பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சொல்லி வரும் நிலையில்,  தற்போது நம்பிக்கை இழந்து அப்படிப் பேசியிருக்கிறார் ஜெயக்குமார் என்கிறார்கள்  அதிமுக தலைமை அலுவலகம் முன்பாக திரண்டிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.