ராகுல் காந்தியின் நடைப்பயணம் பயனற்றது.. காங்கிரஸிலிருந்து பா.ஜ.க.வுக்கு தாவிய தலைவர்

 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என தகவல்..

ராகுல் காந்தியின் நடைப்பயணம் பயனற்றது என்று காங்கிரஸிருந்து பா.ஜ.க.வுக்கு தாவியவரும், மனவதார் சட்டப்பேரவை தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளருமான ஜவஹர் சாவ்தா தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் மனவதார் சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுபவர் ஜவஹர் சாவ்தா. இவர் அஹிர் சமூகத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக கருதப்படுகிறார். ஜவஹர் சாவ்தா 1990ம் ஆண்டு முதல் மனவதார் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். 2019ல் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அதே ஆண்டு அவர் மாநில அரசாங்கத்தில் சுற்றுலா மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகவும் ஆனார்.

ஜவஹர் சாவ்தா

விரைவில் நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் மனவதார் சட்டபபேரவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஜவஹர் சாவ்தா போட்டியிடுகிறார். ஜவஹர் சாவ்தா நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது: இந்திய ஒற்றுமை நடைப்பயணம் பயனற்றது என்று நான் நினைக்கிறேன்.. 370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஒட்டு மொத்த இந்தியாவும் ஒன்றாகி விட்டது.  

காங்கிரஸ்

காங்கிரஸ் வெற்றி பெற விரும்பவில்லை, அந்த கட்சியில் இருந்தபோது நான் உணர்ந்தது இதுதான். கடந்த 32 ஆண்டுகளாக  நான் இங்கு (மனவதார் சட்டப்பேரவை தொகுதியில் போட்டி) இருக்கிறேன், ஐந்து தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளேன். ஆம் ஆத்மி கட்சி படத்தில் எங்கும் இல்லை. காங்கிரஸ் தன்னால் இயன்ற சிறந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதிகாரம் என்ன செய்ய முடியும், மக்களுக்கு நான் எப்படி உதவ முடியும் என்பதை நிரூபித்ததால், இந்த முறை வெற்றி பெறுவது எனக்கு எளிதானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.