காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியால் மட்டுமே பா.ஜ.க.வை எதிர்க்க முடியும்.. ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை

 
ஜெய்ராம் ரமேஷ்

நாம் பா.ஜ.க.வை எதிர்க்கப்போகிறோம் என்றால் அது காங்கிரஸை சுற்றியுள்ள ஒரு கூட்டணியால் மட்டுமே அப்படி செய்ய முடியும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  நிச்சயமாக நான் அதை (இந்திய ஒற்றுமை நடைப்பயணம் போன்று குஜராத் முதல் அருணாசலப் பிரதேசம் வரையிலான நடைப்பயணம்) பற்றி யோசித்து வருகிறேன். கட்சி அத்தகைய யாத்திரையை மேற்கொள்ளுமா என்பதை இப்போது என்னால் சொல்ல முடியாது. 

நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

ஆனால் உதய்பூரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை பற்றி நினைத்தபோது, மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி (குஜராத் முதல் அருணாசலப் பிரதேசம் வரை) நகரும் எண்ணமும் இருந்தது. எதிர்க்கட்சிக் கூட்டணியின் முழு மையமாக காங்கிரஸ் இருக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். ஏனென்றால் இன்றும் (பா.ஜ.க.வை தவிர்த்து) நாங்கள் மட்டுமே தேசிய அரசியல் கட்சியாக உள்ளோம் என்பதால் அது காரணமாக நிற்கிறது. 

காங்கிரஸ்

நாங்கள் மாநிலத்திற்கு மாநிலம் ஆட்சியில் இருக்க முடியாது. ஆனால் நீங்கள் ஒவ்வொரு கிராமம், மொஹல்லா, ஒன்றியம், டவுன், நகரம் என்று பார்த்தால், காங்கிரஸ் தொண்டர்கள், காங்கிரஸ் குடும்பங்களை பார்க்கலாம். அப்படியானால் நாங்கள்தான் ஆதாரம். நாம் பா.ஜ.க.வை எதிர்க்கப்போகிறோம் என்றால் அது காங்கிரஸை சுற்றியுள்ள ஒரு கூட்டணி மட்டுமே அப்படி செய்ய முடியும். பா.ஜ.க.வை காங்கிரஸ் தனியாக எதிர்கொள்ள வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன் ஆனால் 2024ல் அது யதார்த்தமாக இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.