ஏ.ஐ.எம்.ஐ.எம்., ஆம் ஆத்மி மற்றும் ஜனநாயக ஆசாத் கட்சி ஆகியவை பா.ஜ.க.வின் பி-டீம்கள்... ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

 
புதிய சட்டப்பேரவை கட்டுமான பணிகளை நிறுத்திய சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு.. மோடியை தாக்கிய ஜெய்ராம் ரமேஷ்

ஏ.ஐ.எம்.ஐ.எம்.,  ஆம் ஆத்மி மற்றும் ஜனநாயக ஆசாத் கட்சி ஆகியவை பா.ஜ.க.வின் பி-டீம்கள் என்று காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தற்போது காஷ்மீரில் நடந்து கொண்டு இருக்கிறது. காஷ்மீரில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து தொண்டர்களை காங்கிரஸ் அழைத்து வந்துள்ளது என்று அந்த கட்சியின் முன்னாள் மூத்த தலைவரும், ஜனநாயக ஆசாத் கட்சியின் தலைவருமான குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி பதில் அளித்துள்ளது.

குலாம் நபி ஆசாத்
குலாம் நபி ஆசாத்தின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: குலாம் நபி ஆசாத் புதிய கட்சியை இன்னும் தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யாததால் வருத்தமடைந்துள்ளார். நம் நாட்டில் காங்கிரஸின் வாக்கு வங்கிகளை குறைக்க பா.ஜ.க.வின் 3 பி-டீம்கள் உள்ளன. அதில் முதலாவதது அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி. இரண்டாவது ஆம் ஆத்மி மற்றும் மூன்றாவது குலாம் நபி ஆசாத்தின் ஜனநாயக ஆசாத் கட்சி. ஆசாத்தின் புதிய கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியுள்ளனர். இதனால் அவர் இப்போது தோடாவுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளார்.ஆம் ஆத்மிகுலாம் நபி ஆசாத் கட்சி தற்போது தோடா ஆசாத் கட்சியாக மாறியுள்ளது. காங்கிரஸ் வாக்குகளை உடைக்க ஆசாத்தை அனுப்பிய மோடி-ஷாவின் வியூகம் தோல்வியடைந்துள்ளது. கதுவா மற்றும் சம்பா ஆகிய இரு மாவட்டங்களிலும் யாத்திரைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் இதுவரை நடந்த பேரணியில் பங்கேற்றவர்கள் உள்ளூர்வாசிகள். பஞ்சாப் அல்லது ஹரியானாவை சேர்ந்தவர்கள் அல்ல என்பதில் எனக்கு 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.