காங்கிரஸ் கட்சியின் சித்தாந்த திசைகாட்டி ராகுல் காந்தி.. ஜெய்ராம் ரமேஷ்

 
ராகுல் காந்தி

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சித்தாந்த திசைகாட்டி அல்லது தார்மீக திசைகாட்டி தேவை, ராகுல் காந்தி அந்த பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ராகுல் காந்திக்கு பின்னால் இருந்து இயக்குவது பிடிக்காது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு சித்தாந்த திசைகாட்டி அல்லது தார்மீக திசைகாட்டி தேவை, ராகுல் காந்தி அந்த பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர். சிலர் ராகுல் காந்தியை அறையில் உள்ள யானை என்று சொல்கிறார்கள் ஆனால் அவர்களுக்கான  பதில் ராகுல் காந்தி உண்மையில் சாலையில் இருக்கும் புலி. 

ஜெய்ராம் ரமேஷ்

நடந்து கொண்டிருக்கும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் கட்சியின் பொது உறவுக்கும், காந்தியுடனான இணைப்பு மற்றும் அமைப்புக்கான கூட்டுறவிற்கும் உண்மையான பூஸ்டர் டோஸ். மிக உறுதியான தாக்கம் காங்கிரஸ் அமைப்பில் உள்ளது. காங்கிரஸின் மன உறுதி இப்போது அசாரணமான நிலையில் உள்ளது. இது நீண்டகால மக்கள் ஆதரவாக மாறுமா என்பது இப்போது அந்த அமைப்பை சார்ந்துள்ளது. 

காங்கிரஸ்

கட்சியில் என்ன பங்கு வகிக்க வேண்டும் என்பதை அவர்கள் தான் (ராகுல்,  சோனியா) முடிவு செய்ய வேண்டும். 2024ம் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒரு மாபெரும் பாய்ச்சலை எடுக்கப் போவதில்லை, இந்திய ஒற்றுமை நடைப்பயணம் அதற்கான உருமாற்றம் என்று சொல்லப்போவதில்லை, இது நீண்ட தூரம், நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய பல ஆழமான சவால்கள் உள்ளன, இது திறக்கப்பட்ட வாய்ப்பு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.