ஜோதிராதித்ய சிந்தியா ஒரு துரோகி, உண்மையான துரோகி, ரியல் துரோகி மற்றும் 24 காரட் துரோகி... ஜெய்ராம் ரமேஷ் ஆவேசம்

 
ஜெய்ராம் ரமேஷ்

ஜோதிராதித்ய சிந்தியா ஒரு துரோகி, உண்மையான துரோகி, ரியல் துரோகி மற்றும் 24 காரட் துரோகி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தாக்கினார்.

கட்சியில் இருந்து வெளியேறிய தலைவர்களில் யாராவது திரும்பி வர விரும்பினால் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் பதிலளிக்கையில் கூறியதாவது: மீண்டும் காங்கிரஸை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் வரவேற்கக் கூடாது என்று நினைக்கிறேன். கட்சியை விட்டு வெளியேறியவர்கள், துஷ்பிரயோகம் செய்தவர்கள் உள்ளனர், எனவே அவர்களை திரும்ப கட்சிக்குள் சேர்க்கக் கூடாது. ஆனால் கண்ணியத்துடன் கட்சியை விட்டு வெளியேறியவர்களும், காங்கிரஸ் கட்சி மீதும், அதன் தலைமை குறித்தும் கண்ணியமான மவுனம் காத்து வருகின்றனர். 

புலி இன்னும் உயிருடன் இருக்கிறது….. காங்கிரஸ் தலைவர்களுக்கு ஜோதிராதித்ய சிந்தியா எச்சரிக்கை

சில காரணங்களுக்காக கட்சியை விட்டு வெளியேறிய எனது முன்னாள் சகாவும், நல்ல நண்பருமான கபில் சிபலை பற்றி என்னால் நினைத்து பார்க்க முடிகிறது. அனால் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் ஹிமாந்தா பிஸ்வா சர்மா போலல்லாமல் காங்கிரஸ் குறித்து அவர் மிகவும் கண்ணியமான மவுனம் காத்து வருகிறார். எனவே கண்ணியத்தை காப்பாற்றிய அத்தகைய தலைவர்களை மீண்டும் வரவேற்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் கட்சியை விட்டு வெளியேறி கட்சியையும், அதன் தலைமையையும் தாக்கியவர்களை மீண்டும் வரவேற்கக்கூடாது. ஜோதிராதித்ய சிந்தியா ஒரு துரோகி, உண்மையான துரோகி, ரியல் துரோகி மற்றும் 24 காரட் துரோகி. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

ஹிமாந்தா பிஸ்வா சர்மா

சிந்தியாவை துரோகி என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியதற்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. மத்திய பிரதேச பா.ஜ.க. செயலாளர் ரஜ்னீஷ் அகர்வால் கூறுகையில்,  ஜோதிராதித்ய சிந்தியா வலுவான கலாச்சார வேர்களை கொண்ட 24 காரட் தேசபக்தர். சிந்தியா மற்றும் ஹிமாந்தா பிஸ்வா சர்மா இருவரும் தங்கள் பணியில் 24 காரட் அர்ப்பணிப்புடன் உள்ளனர். ஜெய்ராம் ரமேஷின் கருத்துக்கள் பண்பாடு அற்றவை மற்றும் முற்றிலும் ஜனநாயகமற்றவை என தெரிவித்தார்.