காங்கிரஸின் யாத்திரையை சீர்குலைக்க பிரதமர் மோடி கூடுதல் நேரம் வேலை செய்து வருகிறார்... ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

 
ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸின் யாத்திரையை சீர்குலைக்க பிரதமர் மோடி கூடுதல் நேரம் வேலை செய்து வருகிறார் என்று ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டினார்.


 காங்கிரஸ் செப்டம்பர் 7ம் தேதி 3,500 கி.மீ. தூர பாரத் ஜேடோ யாத்ரா (இந்திய இணைப்பு பயணம்) என்ற பாதயாத்திரையை தொடங்குகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், தாரிக் அன்வர், சசி தரூர் மற்றும் ரமேஷன் சென்னிதாலா உள்ளிட்டோர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: எனக்கு தெரிந்த பல அரசியல் கட்சிகளில் மோடிக்கு நண்பர்கள் அதிகம். மேலும் யாத்திரையை (காங்கிரஸின் இந்திய இணைப்பு யாத்திரை) சீர்குலைக்க கூடுதல் நேரம் வேலை செய்து வருகிறார். 

மோடி

ஆகஸ்ட் 5ம் தேதியன்று விலைவாசி உயர்வுக்கு எதிராக நாங்கள் நடத்திய போராட்டம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால், இந்த யாத்திரை வெற்றியடையாமல் இருக்க பா.ஜ.க. கூடுதல் நேரம் உழைக்கிறது. மக்கள் வரலாம், மக்கள் போகலாம், மக்கள் அறிக்கைகளை வெளியிடலாம், மக்கள் நம்மை தாக்கலாம், மக்கள் ராகுல் காந்தி தாக்கலாம் (விமர்ச்சிக்கலாம்). இது எங்களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. யாத்திரை தொடரும். ஏற்கனவே கட்சியை விட்டு வெளியேறியவர்களும், புறப்படும் அறைகளில் காத்திருப்பவர்களும்  மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிராக எந்த வார்த்தையும் பேசவில்லை. 

காங்கிரஸ்

இந்திய இணைப்பு யாத்திரையை சீர்குலைக்க மேட்ச் பிக்சிங் நடக்கிறது. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி மற்றும் அழிவை கணிப்பவர்கள் அனைவரும் ஏமாற்றமடைவார்கள். இந்திய இணைப்பு யாத்திரை காங்கிரஸூக்கு சஞ்சீவனி, மோடி அரசின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் கொள்கைகளுக்கு எதிரானது. இந்த யாத்திரை தொண்டர்களை உற்சாகப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். இது கட்சியை செயல்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.