மனைவி கை பட்டாலும் கையெடுத்து கும்பிடுவோம்; ஜெயிச்சிட்டா கண்ணே தெரியாது -அரசியல்வாதிகள் பற்றி அமைச்சர் காந்தி

 
g

வாக்கு கேட்கும்போது மட்டும் வீடு தேடி வந்து காலில் விழுந்தெல்லாம் வாக்கு கேட்கிறார்கள்.  ஜெயித்து விட்டால் நாம் போய் கால்நடுக்க நின்றால் கூட சந்திக்க மறுக்கிறார்கள் என்ற விமர்சனம் மக்களைடையே இருக்கிறது. 

இதுகுறித்து அமைச்சர் ஆர்.காந்தி, மனைவி கை பட்டாலும் கையெடுத்து கும்பிடுவோம்; ஜெயிச்சிட்டா கண்ணே தெரியாது  என்று கூறியிருக்கிறார்.

du

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர் பயனாளிகள் உட்பட ஆராய்ந்து 6675 எழுபத்தி பேருக்கும்,  1.29 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள் உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது.  ஆட்சியாளர் ஜெய சந்திர வானூர்தி இந்த விழாவிற்கு தலைமை வைத்தார். 

 இந்த விழாவில் பேசிய அமைச்சர் காந்தி,  நாங்களெல்லாம் அரசியல்வாதிகள்.  தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு பார்ப்பவர்களை எல்லாம் பார்த்து கையெத்து கும்பிடுவோம்.  அப்புறம் எங்களுக்கு கண்ணே தெரியாது என்றார்.

 எங்கள் வேலூர் காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருடன் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றபோது அங்கு அங்கு நின்றிருந்த 200 பேரை பார்த்து கும்பிட்டு வாக்கு சேகரித்தார்.  ஒரே இடத்தில் 200 ஓட்டை வாங்கி விடலாம் என்று அவர் நினைத்தார்.  ஆனால் அவர்களோ,  எங்க ஊர் சித்தூர்.  ஒரு வேலை விஷயமாக இங்கு வந்து நிற்கிறோம் என சொல்லி இருக்கிறார்கள்.  இதை கேட்டு துரைமுருகன் அப்செட் ஆகிவிட்டார்  என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

 பொதுவாக குழந்தைகள் அழும்போது சாக்லேட் கொடுப்பார்கள்.  அதே மாதிரி தான் மக்களுக்கு என்ன தேவையோஅதை அப்படியே செய்து விடுவோம்.  தூக்கத்தில் மனைவி கை வைத்தாலும் அவர்களையும் கும்பிடுவோம்.  ஆனா வெற்றி பெற்று விட்டால் அரசியல்வாதிகளுக்கு கண்ணே தெரியாது என்று உண்மையை போட்டு உடைத்தார்.

 அவர் மேலும் , உங்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என்று மக்களாகிய நீங்கள் தான் யோசித்து ஓட்டு போட வேண்டும் . அப்போதுதான் அரசியல்வாதிகளுக்கு பயம் வரும்.  மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசியல்வாதிகளுக்கு பயம் வரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் வரும் என்றார்.