ம.பி. காங்கிரஸில் 40 மகாமந்திரிகள், 156 மந்திரிகள் உள்ளனர் ஆனால் தொண்டர்கள் இல்லை.. ஜே.பி. நட்டா கிண்டல்

 
40 ஆண்டுகளாக காஷ்மீரை கொள்ளையடித்த தலைவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்- ஜே.பி. நட்டா தகவல்

மத்திய பிரதேச காங்கிரஸில் 40 மகாமந்திரிகள், 156 மந்திரிகள் உள்ளனர் ஆனால் தொண்டர்கள் இல்லை என ஜே.பி. நட்டா கிண்டல் செய்தார்.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா 2 நாள் பயணமாக நேற்று மத்திய பிரதேசம் சென்றார். போபால் விமான நிலையத்தில் வந்து இறங்கிய ஜே.பி. நட்டாவை மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் வரவேற்றார். விமான நிலையத்தில் ஜே.பி. நட்டா பேசுகையில் கூறியதாவது: நான் நேற்று ஒரு காங்கிரஸ் தொண்டரை சந்தித்தேன். அவர் என்னிடம் எங்களிடம் (காங்கிரஸ் கட்சியில்) 40 மகாமந்திரிகள் மற்றும் 156 மந்திரிகள் உள்ளனர், 

காங்கிரஸ்

ஆனால் தொண்டர்கள் இல்லை என தெரிவித்தார். பா.ஜ.க. முதலில் தேசம் என்ற கொள்கையை பின்பற்றுகிறது. நாம் நாட்டுக்காக உழைக்க வேண்டும். நமது விருப்பம் பா.ஜ.க.வை உலகின் மிகப்பெரிய கட்சியாக மாற்றும் தொண்டர்களை நமக்கு வழங்குகிறது. 70 ஆண்டுகளாகியும், சீக்கியர்களின் தேவைகளுக்கு யாரும் செவிசாய்க்கவில்லை. கர்தார்பூர் வழித்தடத்தின் வழியாக இந்தியாவை பாகிஸ்தானுடன் இணைக்கும் பணியை பிரதமர் நரேந்திர மோடி ரூ.120 கோடி செலவில் மேற்கொண்டார்.

பிரதமர் மோடி

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் மத்திய பிரதேச பயணம், அம்மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ளாட்சி தேர்தல், 2023ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 2024ல் நடக்கவுள்ள மக்களவை தேர்தல் வரையிலான அனைத்து தேர்தல்களுக்கும், பா.ஜ.க. தொண்டர்களை அணி திரட்டுவதற்கான தொடக்க புள்ளியாக கருதப்படுகிறது.