குஜராத் மக்களை ஏமாற்றியதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும்.. பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா

 
ஜே.பி. நட்டா

குஜராத் மக்களை ஏமாற்றியதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட் க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா வலியுறுத்தினார்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசுகையில், ஆம் ஆத்மி கட்சி, உத்தர பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய தேர்தல்களில் ஆம் ஆத்மி டக்சி டெபாசிட் இழந்தது, ஆனால் யாரும் அதை பற்றி பேசவில்லை என தெரிவித்தார். மேலும், ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த அக்டோபரில், குஜராத்தில் தனது கட்சி ஆட்சியமைக்கும் என்று உளவுத்துறை அறிக்கை கூறுவதாக கூறியிருந்ததையும் ஜே.பி. நட்டா விமர்சனம் செய்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

ஜே.பி. நட்டா கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலில் போட்டியிட வாரணாசி சென்று, படுதோல்வி அடைந்து, திரும்பி வந்து மன்னிப்பு கேட்டார். உத்தர பிரதேசம் சென்று பல இடங்களில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். பொது வாழ்க்கையில் மக்கள் எப்படி இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. 

ஆம் ஆத்மி

அதை (அரவிந்த் கெஜ்ரிவாலின் உளவுத்துறை அறிக்கை தகவல்) பற்றி எதுவும் பேசவில்லை. குஜராத் மக்களை ஏமாற்றியதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட் க வேண்டும். இது போன்ற தவறுகளை நாம; செய்தால், நமது அரசியல் வாழ்க்கையே முடிந்து விடும். கோவாவில் ஆம் ஆத்மி போட்டியிட்ட 39 தொகுதிகளில் 35ல் டெபாசிட் இழந்தது, இமாச்சல பிரதேசத்தில் போட்டியிட்ட 67 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது.