குடும்ப கட்சிகளின் ஒரே நோக்கம் ஆட்சியை பிடிப்பது.. காங்கிரஸ் ஒரு சகோதர-சகோதரி கட்சியாக மாறி விட்டது.. ஜே.பி. நட்டா

 
ஜே.பி.நட்டா

குடும்பத்தால் நடத்தப்படும் கட்சிகளின் ஒரே நோக்கம் ஆட்சியை பிடிப்பது, காங்கிரஸ் கட்சி ஒரு சகோதர-சகோதரி கட்சியாக மாறி விட்டது என ஜே.பி. நட்டா குற்றம் சாட்டினார்.


டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். அந்த கருத்தரங்கில் ஜே.பி. நட்டா பேசுகையில் கூறியதாவது: குடும்பத்தால் நடத்தப்படும் கட்சிகளின் ஒரே நோக்கம் ஆட்சியை பிடிப்பதே. அவர்களுக்கு சித்தாந்தம் இல்லை. அவர்களின் திட்டங்களும் நோக்கமற்றவை. காங்கிரஸூம், தேசியமாகவோ, இந்தியராகவோ, ஜனநாயகமாகவோ மாறவில்லை. 

அரசியல் கட்சிகள்

அது (காங்கிரஸ்) ஒரு சகோதர-சகோதரி கட்சியாகவும் மாறி விட்டது. நாட்டில் குடும்பம் சார்ந்த கட்சிகளுக்கு எதிராக பா.ஜ.க. போராடுகிறது. இந்த கட்சிகள் எனது விருப்பம், எனது சட்டங்கள் என்ற கொள்கையில் இயங்குகின்றன. பிராந்திய கட்சிகள் எந்த வகையிலும் ஆட்சிக்கு வர வேண்டும். எனவே அவை பிரிவினை செய்வதில் பின்தங்கவில்லை. சாதி அல்லது மதத்தின் அடிப்படையில் பிரிவினை செய்கின்றன. 

காங்கிரஸ்

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அதிகாரத்தை கைப்பற்ற துருவமுனைப்பு செய்கிறார்கள். இக்கட்சிகளில் உள்ள சித்தாந்தம் புறக்கணிக்கப்பட்டு குடும்பங்கள் முன்னணிக்கு வந்துள்ளதால், சிலர் பிராந்திய கட்சிகளை கைப்பற்றி உள்ளனர். இதன் மூலம் பிராந்திய கட்சிகள் குடும்ப கட்சிகளாக மாறியுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.