விவசாயிகள் பெயரில் எப்போதும் அரசியல் செய்பவர்கள் சிலர், ஆனால் விவசாயிகளின் வலியை போக்க பா.ஜ.க. பாடுபட்டது.. நட்டா

 
ஜே.பி.நட்டா

விவசாயிகள் பெயரில் எப்போதும் அரசியல் செய்பவர்கள் சிலர்,  ஆனால் விவசாயிகளை புரிந்து கொண்டு அவர்களின் வலியை போக்க பா.ஜ.க. பாடுபட்டது என்று ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் அனைத்து அந்த மாநிலத்தில் இப்போது  தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா 2 நாள் பயணமாக நேற்று குஜராத் சென்றார்.

விவசாயி

குஜராத் தலைநகர் காந்திநகர் அருகே நடைபெற்ற பா.ஜ.க.வின் கிசான் மோர்ச்சா நிகழ்ச்சியில், ஜே.பி. நட்டா மின் பைக்குகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதன் பிறகு அங்கு நடைபெற்ற கூட்டத்தில் ஜே.பி. நட்டா பேசுகையில் கூறியதாவது: விவசாயிகள் பெயரில் எப்போதும் அரசியல் செய்பவர்கள் சிலர்,  ஆனால் விவசாயிகளை புரிந்து கொண்டு அவர்களின் வலியை போக்க பா.ஜ.க. பாடுபட்டது. 

பா.ஜ.க.

உங்களுக்ககாக நாங்கள் உழைத்தோம் என்று பா.ஜ.க. தலைவர்கள் மட்டுமே பொதுமக்கள் மத்தியில் சென்று கூற முடியும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஜே.பி. நட்டா தனது 2 நாள் பயணத்தின் போது, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், அம்மாநில தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார்.