வருத்தத்துடன் சொல்கிறேன்... காங்கிரஸ் கட்சி மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது.. ஜே.பி. நட்டா

 
காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது என்பதை வருத்தத்துடன் சொல்கிறேன் என பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் கர்நாடகா சென்று இருந்தார். அந்த மாநிலத்தில் ஹோசப்பேட்டையில் நடைபெற்ற பா.ஜ.க.வின் கட்சி கூட்டத்தில் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: ராம நவமி ஊர்வலத்தின் மீதான தாக்குதல்களையோ அல்லது வேறு ஏதாவது இடத்தில் நடந்ததையோ நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இது கர்நாடக முதல்வர் பொம்மையின் விஷயம். அவர் இந்த விஷயங்களையும்  அதன் விவரங்களையும் விசாரிப்பார்.

ஜே.பி. நட்டா

ஆனால் இது ( ஊர்லவம் மீதான தாக்குதல்) நாட்டை பிளவுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட வழி என்று என்னால் சொல்ல முடியும். மேலும் காங்கிரஸ் கட்சி மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். பல மாநிலங்களில் ஊர்வலங்கள் மீதான தாக்குதல்களில் பங்கினை கொண்டுள்ளதற்காக தீவிர கண்காணிப்பில் உள்ள தீவிரவாத இஸ்லாமிய அமைப்பு பி.எப்.ஐ..

சித்தராமையா

பி.எப்.ஐ. அமைப்பின் சில உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா உதவினார். நீங்கள் தீவிரவாதத்து்ககு எதிராக பேசுகிறீர்கள் ஆனால் தீவிரவாதிகளை விடுவிக்கிறீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக கர்நாடகாவில் சில மதவாத மோதல்கள் வெடிக்கும் சில சம்பவங்கள் நடந்துள்ளன. இது முதலில் ஹிஜாப் பின்னர் ஹலால் இறைச்சி அதனை தொடர்ந்து அசானின் போது மசூதிகளில் ஒலி பெருக்கிகளுடன் தொடங்கியது.