பா.ஜ.க. அரசாங்கத்தின் கீழ் நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறது.. ஐக்கிய ஜனதா தளம் குற்றச்சாட்டு

 
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

பா.ஜ.க. அரசாங்கத்தின் கீழ் நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறது என்று ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கட்சியின்  தலைவர் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் குரல்களை அமைதிப்படுத்த முயற்சிக்கும் பா.ஜ.க. அரசாங்கத்தின் கீழ் நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை இருப்பதாக குற்றம் சாட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, கருத்து வேறுபாடுகளின் ஜனநாயக உரிமையை தேசத்துரோகம் என்று முத்திரை குத்துகிறது.

பா.ஜ.க.

பா.ஜ.க.வுக்கு மாற்றை  நாடு தேடிக்கொண்டிருக்கிறது, அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளை களைந்து ஒன்றுபட வேண்டும். நாட்டில் வகுப்புவெறியை பா.ஜ.க. தூண்டுகிறது. சிறுபான்மையினர் குறிவைக்கப்படுகிறார்கள். சமூகத்தில் சகிப்பின்மை மற்றும் தீவிரவாதம் அதிகரித்துள்ளது. தலித்துகள் மற்றும் பழங்குடியினர் துன்புறுத்தப்படுகிறார்கள். டெல்லி மற்றும் ஜார்க்கண்ட் உள்பட பல மாநிலங்களில் பா.ஜ.க. அல்லாத அரசாங்களை ஸ்திரமின்மை செய்ததற்கான முயற்சிகள் ஆளும் பா.ஜ.க.வின் ஏதேச்சதிகார போக்கு என ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது.

அசோக் சௌத்ரி

ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் முடிவடைந்தபிறகு, அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பீகார் அமைச்சருமான அசோக் சௌத்ரி கூறுகையில், 2024 பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்காக எதிர்க்கட்சிகளுடன் பேச இந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளளோம் என தெரிவித்தார்.