எதிர்க்கட்சிகள் விரும்பினால் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமார் தயார்.. ஐக்கிய ஜனதா தளம் சூசகம்

 
கொரோனா, வெள்ளம் பிடிக்கும் சிக்கி தவிக்கும் பீகார்… ஆனாலும் தேர்தலை நடத்த துடிக்கும் நிதிஷ் குமார் கட்சி

மற்ற எதிர்க்கட்சிகள் இஷ்டப்பட்டால் பிரதமர் பதவிக்கு நிதிஷ் குமார் மிகவும் தகுதியானவராக இருப்பார் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் லாலன் சிங் தெரிவித்தார்.

ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் லாலன் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மற்ற எதிர்க்கட்சிகள் இஷ்டப்பட்டால் பிரதமர் பதவிக்கு நிதிஷ் குமார் மிகவும் தகுதியானவராக இருப்பார். எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளருக்கு நிதிஷ் குமார் இல்லை என்று மற்ற கட்சிகள் நினைத்தாலும் அவர் அதை வெறுக்க மாட்டார். பீகார் முதல்வர் விரும்புவது ஒன்றுப்பட்ட எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும், அதனால் பா.ஜ.க.வை எதிர்க்கொள்ள முடியும். 

லாலன் சிங்

மற்ற கட்சிகள் முடிவு செய்து விரும்பினால், அது ஒரு விருப்பம். பீகார் சட்டப்பேரவையில் அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற பிறகு, பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நிதிஷ் குமார் டெல்லி செல்வார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளிநடப்பு செய்ததும், சரத் பவார், அரவிந்த்  கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

பா.ஜ.க.

தலைமை விவகாரத்தில் (பிரதமர் வேட்பாளர்) அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து முடிவு எடுக்க  வேண்டும். அல்லது, பா.ஜ.க.வை தோற்கடிக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராடி, யார் தலைவர் என்பதை பின்னர் முடிவு செய்ய வேண்டும். இரண்டு வாய்ப்புகளும் உள்ளன. பா.ஜ.க.வை எதிர்த்து போராடும் மற்ற கட்சிகள் அனைத்தையும் ஒரே தளத்தில் கொண்டு வந்து, அதன் ஆட்சிக்கு ஒன்றுபட்ட சவாலை ஏற்படுத்தும் வகையில் நிதிஷ் குமார் பணியாற்றுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.