‘’இது வெறும் ட்ரெய்லர்தான், மெயின் பிக்சரே இனிதான்! நாங்க பேச வேண்டிய நேரமிது...இனி திமுக காவடியும் தூக்கும்’’

 
இம்க்

இது வெறும் ட்ரெய்லர்தான், மெயின் பிக்சரே இனிதான் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இ

இந்து மக்கள் கட்சியின் சுதந்திர இந்தியா 75 ஆம் ஆண்டு அமுதவிழா யாத்திரை நிறைவு விழாவை முன்னிட்டு தாராபுரம் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் பாரத மாதாவிற்கு மரியாதை செலுத்தப்பட்டது.  இந்து மக்கள் கட்சியின் வந்தே மாதர யாத்திரை நிறைவு விழாவிற்காக திருப்பூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள் பிளேடால் கிழிக்கப்பட்டதற்கு கண்டனங்கள் பறந்து வருகின்றன.   அதுகுறித்து அர்ஜூன் சம்பத்,  பிரிவினைவாதிகளுக்கு இந்து மக்கள் கட்சியின் வளர்ச்சி பொறுக்கமுடியவில்லை என்பதையே இது காட்டுகிறது!  இந்து மக்கள் கட்சியின் சுதந்திர இந்தியா 75ஆம் ஆண்டு பவளவிழா யாத்திரையின் நிறைவாக தாராபுரம் வீதிகளில் எங்கள் தாய் பாரதமாதா தேசியக்கொடி கொடி ஏந்தி நகர்வலம் வந்தாள் என்று தெரிவித்திருக்கிறார்.

 இந்து மக்கள் கட்சியின் 75ஆம் ஆண்டு சுதந்திர இந்திய அமுத விழா யாத்திரை நிறைவுநாள் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் கொங்கு மண்டலத்தில்  கும்மி ஆட்டத்துடன் கடந்த 14ம் தேதி பொதுக்கூட்டம் நடந்தது.   இது கண்டவன் மண் கிடையாது! எங்கள் பாரத மண்! ஆன்மீக மண்! தேசபக்தியும், தெய்வீக உணர்வும் கொண்ட உன்னத மண்! என்ற முழக்கங்கள் அந்த பொதுக்கூட்டத்தில் எழுந்தன.

இது பழைய இந்து மக்கள கட்சி அல்ல என்று எச்சரித்தார் இந்து மக்கள் கட்சி மாவட்ட துணைத்தலைவர், கே.சங்கர் மகேஷ்.   எந்த ஒரு கட்சியும் செய்யாத ஒரு யாத்திரையை இந்து மக்கள் கட்சி செய்துள்ளது!  தேசபக்தி யாத்திரையை  தமிழகத்தில் செய்த ஒரே கட்சி இந்து மக்கள் கட்சி! என்றார் இந்து மக்கள் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் திருமுருகனார்.

ம்

சாமியார்கள் அரசியல் மேடையில் பேசலாமா என கேட்கிறார்கள்! நாங்க பேச வேண்டிய நேரமிது! என்றா ஜகத்குரு. காமாட்சிபுரி ஆதினம் சுவாமிகள்.

தமிழ்நாட்டில் இன்றைக்கு பல ஊர்களில் ஈ.வே.ரா சிலையை வைத்து  திட்டமிட்டு சுதந்திர போராட்ட வீரர்களை மறைத்துவிட்டனர் திராவிட கும்பல்கள் என்றார் இந்து மக்கள் கட்சி மாநில அமைப்புக்குழு தலைவர்,சடையப்பன் பொன்னுசாமி.

இந்து மக்கள் கட்சி இந்த யாத்திரையை துவங்கிய அன்றே திமுக அரசு தடை விதித்தது, கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க மறுத்தது!  ஏன் அவ்வளவு பயம்?முதல்வரே நாங்க உங்க அப்பா காலத்திலேயே அரசியல் செய்தவர்கள், அவர் முதல்வராக இருக்கும் போதே ஸ்ரீரங்கத்தில் ஈ.வே.ரா சிலையை தூக்கி கருணாநிதியை ஒருவாரம் தூங்க விடாமல் செய்தவர்கள்! வரலாற்றை திமுக சீனியர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்றார் அர்ஜூன்சம்பத்.

இ

இந்து மக்கள் கட்சியின் இந்திய சுதந்திர 75ஆம் ஆண்டு வந்தேமாதர யாத்திரை துவங்கிய அன்றே திமுக அரசு கூட்டங்களுக்கு அனுமதி மறுத்து, வாகனத்தில் உள்ள வாசகங்களை மறைக்க கோரியது,திமுக பயந்த  அன்றே இந்த யாத்திரை வெற்றி பெற்றுவிட்டது என்று யாத்திரை மற்றும் அந்த பொதுக்கூட்டம் குறித்து குறிப்பிடும் அர்ஜூன் சம்பத்,

 ஒரு மாதம் முழுக்க நடந்தது எங்களின் வெற்றி பயணம்தான்.  தமிழகம் முழுவதும் உயிரை கொடுத்து சுதந்திரத்திற்கு போராடிய தியாகிகளை மறைத்து, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத ஈ.வே.ரா, கருணாநிதி சிலைகளை வைத்து வரலாற்றை திரிக்க திராவிடர் கழக பின்புல திமுக முயன்றதை இந்து மக்கள் கட்சி மக்கள் மத்தியில் முகத்திரையை கிழித்தது போன்று அம்பலப்படுத்தியுள்ளது! தமிழகத்தில் தேசிய சிந்தனையை மழுங்கடித்து, சாராயத்தை ஊற்றிக்கொடுத்து தன் குடும்ப வாரிசுகளுக்கு ஜால்ரா அடிக்கும் அற்ப விழுதுகளை திமுக உருவாக்கி வைத்திருக்கிறது! இதனை இந்த யாத்திரை மூலம் மக்களிடத்தில் கொண்டு சென்றுள்ளோம், விரைவில் விதை வளரும் பொழுது தெரியும்! என்கிறார்.

அச்

அவர் மேலும்,   இந்து மத ஒற்றுமை ஓங்க,தேசிய உணர்வு தழைத்தோங்க,பிரிவினைவாதிகளை புறந்தள்ளி, தேசியவாதிகள் முன்னேற,  ஊழல், குடும்ப அராஜகம் ஒழிந்து அனைத்து மக்களுக்கு அனைத்தும் கிடைக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று சொல்லும் அர்ஜூன் சம்பத்,  இந்து என்றால் இளக்காரம், மற்ற மதங்கள் என்றால் பரிவட்டம் என்ற திமுகவின் குள்ளநரித்தனத்தை மக்கள் புரிந்துகொள்ள துவங்கிவிட்டனர்! அதன் விளைவே 'திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல' என்ற முதல்வர் ஸ்டாலினின் குட்டிகரணம்!   இதுவே இந்து மக்களாகிய எங்களின் வெற்றி! இனி திமுக காவடியும் தூக்கும்!சுருங்க சொன்னால் இந்த யாத்திரை வெறும் ட்ரெய்லர்தான், மெயின் பிக்சரே இனிதான் என்கிறார்.